முகப்பு /செய்தி /கடலூர் / உஷார்... சிலிண்டருக்கு அடியில் சீறிய நல்ல பாம்பு.. கடலூரில் ஷாக் சம்பவம்..!

உஷார்... சிலிண்டருக்கு அடியில் சீறிய நல்ல பாம்பு.. கடலூரில் ஷாக் சம்பவம்..!

சிலிண்டரில் பாம்பு

சிலிண்டரில் பாம்பு

சிலிண்டருக்கு கீழே இருந்து நல்ல பாம்பு வெளியில் படம் எடுத்து ஆடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் வெளிச்செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய வீட்டு சமையலறையில் கேஸ் சிலிண்டர் இருக்கும் பகுதியிலிருந்து தொடர்ந்து சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இன்று பிற்பகல் அந்த பகுதியை பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிலிண்டருக்கு கீழே இருக்கும் சிறு துவாரம் வழியாக எட்டிப் பார்த்த பாம்பு படம் எடுத்ததைக் கண்டு நடுங்கினார்  மதியழகன்.

உடனடியாக கடலூர் பாம்பு ஆர்வலர் செல்லாவிற்கு தகவல் கொடுக்க, செல்ல அங்கு சென்று பார்த்தார். பாம்பு இருக்கின்ற இடமே தெரியாத நிலையில் அமைதியாக பதுங்கிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து சிலிண்டரை வெளியில் எடுத்து கவுத்துப் பார்த்தார் அப்போதும் தெரியவில்லை. பின்னர் மெல்ல அந்த சிலிண்டரின் கீழ்பகுதியில் இருந்து எட்டிப் பார்த்த நல்ல பாம்பு படம் எடுத்ததை கண்டு வீட்டில் இருந்தவர்கள் அலறினார்கள்.

பாம்பை லாவகமாக பிடித்த செல்லா அதனை ஆசுவாசப்படுத்தி பாட்டிலில் அடைத்து காப்பு காட்டில் சென்று விட்டார். சிலிண்டருக்கு கீழே இருந்து நல்ல பாம்பு வெளியில் படம் எடுத்து ஆடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- பிரேம் ஆனந்த், கடலூர் செய்தியாளர்

First published:

Tags: Cuddalore, Snake