ஹோம் /நியூஸ் /கடலூர் /

பள்ளி மாணவர் ஷூவில் படமெடுத்து ஆடிய நாகம்! ஷாக்கான குடும்பத்தினர்!

பள்ளி மாணவர் ஷூவில் படமெடுத்து ஆடிய நாகம்! ஷாக்கான குடும்பத்தினர்!

ஷூக்குள் புகுந்த பாம்பு..

ஷூக்குள் புகுந்த பாம்பு..

Snake in Cuddalore | இனி மழை என்பதால் பாம்பு வீடுகளை நோக்கி படையெடுக்கும் எனவே பெற்றோர்கள் அலட்சியாக இருக்காமால் நாள் தோறும் குழந்தைகளின் காலணிகளை கவனித்து போட்டு விடவேண்டும்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  பாம்பு ஒன்று பள்ளி மாணவரின் ஷூக்குள் இருந்தது அவரின் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

  பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். பெரும்பாலன மனிதர்களுக்கு பாம்பு என்றால் பயம் இருப்பது உண்டு. விளையாட்டாக பாம்பின் பெயரை சொல்லி பயமுறுத்தி ஏமற்றுவதும் உண்மையாகவே பாம்பை கண்டதும் அரண்டு ஓடுவது போன்ற செயல்கள் அடிக்கடி நடக்கும் ஒன்று. சினிமாவில் தொடங்கி நிஜ வாழ்க்கை வரை பாம்பு என்றால் பயமும் பதட்டமும் சில சமயங்களில் நகைச்சுவை நிகழ்வும் ஏற்படுவது இயல்பானது.

  இருப்பினும் கிராம பகுதிகளிலும் சில நகரப்பகுதிகளிலும் வாழ்பவர்கள் அவர்கள் இருக்கும் பகுதியில் பாம்பின் நடமாட்டம் இருக்குமாயின் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு தீங்கு ஏற்படாமல் பாதுகக்க வேண்டிய சூழல் உள்ளது. பொதுவாக குழந்தைகளின் ஷூ, பை, முதலியவற்றை ஒரு முறைக்கு இரு முறை பார்த்து விட்டு அவர்களுக்கு அணிவிப்பது வழக்கம். ஏதேனும் பூச்சி இருக்குமோ என்ற ஐயமே அதற்கு முதற் காரணம். அப்படி ஒரு சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

  கடலூர் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் உள்ள அசோகன் என்பவர் வீட்டில் இன்று காலை ஆயுத பூஜையொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவரது குழந்தைகளின் பள்ளி ஷூவினை (காலணி)சுத்தம் செய்யும் போது ஷூவில் குட்டி பாம்பு புகுந்து இந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தார். நல்ல வேலையாக அன்று பள்ளி விடுமுறை என்பதால் குழந்தை ஷூ -வை அணியும் சூழல் ஏற்படவில்லை.

  Read More : மலப்புறத்தில் திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழப்பு...

  பின்னர் கடலூரில் உள்ள பாம்புபிடி வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.பாம்புபிடி வீரர் செல்லா சம்பவ வீட்டிற்ககு சென்று ஷூவில் இருந்த குட்டி நாக பாம்பை பத்திரமாக மீட்டு அருகாமையில் உள்ள காப்பு காட்டில் விட்டார்.

  இனி மழை என்பதால் பாம்பு வீடுகளை நோக்கி படையெடுக்கும் இது போல் பள்ளி குழந்தைகளின் காலணியில் புகுந்து கொள்ளும் எனவே பெற்றோர்கள் அலட்சியாக இருக்காமல் நாள் தோறும் குழந்தைகளின் காலணிகளை கவனித்து அணிவிக்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Cuddalore, Snake, Trending, Viral