Home /News /cuddalore /

பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்கள் கைது

பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்கள் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Crime: திட்டக்குடியில் 10-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி அருகே பள்ளி மாணவியை வீட்டுக்குள் பூட்டி வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து  வீடியோ எடுத்து மிரட்டிய 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவர் 15 வயது பள்ளி சிறுமி. இவர் அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.  அதே பள்ளியில் பிளஸ்-2 முடித்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22-ந்தேதி சக மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, தனது பிறந்தநாளை கொண்டாடினார்.  இதில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 10 ம் வகுப்பு படிக்கும் மாணவி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், கேக் வெட்டிய போது, பிறந்தநாள் கொண்டாடிய மாணவர், மாணவியுடன் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதையடுத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.  மாணவியுடன் 10 ம் வகுப்பில் படித்து வரும் ஆவினங்குடியை சேர்ந்த ஒரு மாணவர், அந்த மாணவியிடம் பிறந்தநாள் விழாவில் நீ கொடிக்களத்தை சேர்ந்த மாணவருடன் எடுத்த புகைப்படம் என்னிடம் உள்ளது, உனது வீட்டில் கொடுத்துவிடுவேன் என்று கூறி மிரட்டினார். இதை உன் வீட்டில் தரக்கூடாது என்றால் நான் கூப்பிடும் இடத்துக்கு நீ வர வேண்டும் என்று தெரிவித்தார்.

அதன்பேரில் கடந்த 1-ந்தேதி, பள்ளி உணவு இடைவேளையின் போது அந்த மாணவி, பள்ளியின் பின்பகுதியில் உள்ள அந்த மாணவரின் வீட்டுக்கு சென்றார். அப்போது அந்த வீட்டுக்குள் மாணவி சென்றவுடன், மிரட்டல் விடுத்த அந்த மாணவர் உள்பக்கமாக கதவை பூட்டிவிட்டார். வீட்டுக்குள் சிக்கிய அந்த மாணவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேலும், உள்ளே மாணவியுடன் 10ம் வகுப்பு படித்து வரும் மேலும் 2 மாணவர்கள் இருந்தனர். தொடர்ந்து அந்த 3 மாணவர்களும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடூரத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இருந்துவந்தார்.

Also Read:  கணவன் கழுத்தை நெறித்துக்கொன்று நாடகமாடிய மனைவி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

இந்த சூழ்நிலையில் அந்த 3 மாணவர்களும் தாங்கள் எடுத்த வீடியோவை சென்னைக்கு வேலைக்காக சென்ற கொடிக்களத்தை சேர்ந்த மாணவருக்கு தெரியும் வகையில் அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவரிடம் சாதாரண வகை செல்போன் இருந்ததால், அவருடன் இருக்கும் ஆவினங்குடி பகுதியை சேர்ந்த மற்றொருவரின் செல்போனுக்கு கொடிக்களம் மாணவருக்கு தெரியும் வகையில் வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வீடியோ விவகாரம் மேலும் ஒரு மாணவருக்கு தெரியவந்தது. அந்த மாணவரும், மாணவியிடம் சென்று தன்னிடம் வீடியோ உள்ளது என்று கூறி மிரட்டல் விடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது தாயிடம் கூறி, இனி பள்ளிக்கு படிக்க செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தாய், ஆவினங்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் அவர்களது செல்போனை சோதித்த போது அதில் மாணவியின் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது. இதையடுத்து ஆவினங்குடியை சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்ததாக கொடிக்களத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் உட்பட என 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Also Read: உணவு டெலிவரி செய்வது போல டெலிவரி பாய் போட்ட திட்டம்.. அரசு மருத்துவமனைகளே டார்கெட்.. சென்னையில் திடுக்!

இதற்கிடைய சம்பவம் பற்றி அறிந்த மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் பிரச்சினைக்குரிய பள்ளி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து கைதான 4 பேரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரது தாயுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Police, Rape, School students, Sexual abuse, Sexual assault allegations, Sexual harrasment, Tamil News

அடுத்த செய்தி