ஹோம் /நியூஸ் /கடலூர் /

முதலில் யார் செல்வது.. பார்ப்போமா!- டிரைவர்கள் போட்டியால் கவிழ்ந்த பள்ளி வாகனம்: 20 மாணவர்கள் காயம்

முதலில் யார் செல்வது.. பார்ப்போமா!- டிரைவர்கள் போட்டியால் கவிழ்ந்த பள்ளி வாகனம்: 20 மாணவர்கள் காயம்

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்

விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம்

அதிவேகத்தில் அலட்சியமாக வாகனத்தை இயங்கி சென்ற போது இரு பள்ளி வாகனமும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூரில் பள்ளிக்கு யார் முதலில் செல்வது என வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களை இயக்கியபோது எதிர்பாராத விதமாக பள்ளி வாகனம் கவிழ்ந்து 20 மாணவர்கள் காயமடைந்தனர். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கோபலாபுரம் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.  தனியார் பள்ளி வாகனங்கள் காலையில் விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் சென்று படிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு அழைத்து செல்லவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று விருத்தாசலத்தில் இருந்து வாகனத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற போது கோ.ஆதனுர் அருகே பள்ளி வாகனமும் - அதே பள்ளியின் மற்றொரு வாகனமும் ஒன்றை ஒன்று முந்தி செல்லும் நோக்கில் அதிவேகமாக சென்றன. பள்ளி வாகனத்தின் ஓட்டுநர்கள் அலட்சியத்தோடும் பொறுப்பற்ற தன்மையோடும் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றபோது எதிர்பாராத விதமாக அவை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...

இந்த விபத்தில் 20க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்து  விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by:Arunkumar A
First published:

Tags: Cuddalore