ஹோம் /நியூஸ் /கடலூர் /

சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதம்- சவுக்கு சங்கர் உடல்நலம் பாதிப்பு

சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதம்- சவுக்கு சங்கர் உடல்நலம் பாதிப்பு

சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர்

தன்னை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்கக் கோரி சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

  நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டும்,இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்து இருந்தார் சவுக்கு சங்கர். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தனர்.

  இதையடுத்து, அவர் மதுரை சிறையில் இருந்து கடந்த 16ம் தேதி, கடலுார் சிறைக்கு மாற்றப்பட்டார். கடந்த 14 ஆண்டுகளாக தற்காலிக பணிநீக்கத்தில் இருந்த அவரை, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சவுக்கு சங்கரை பார்க்க அதிக பார்வையாளர்கள் வருகின்றனர் என்று கூறி அவரை பார்வையாளர்கள் சந்திக்க சிறை காவல் துறை தடை விதித்தது.

  இதையும் படிங்க: குடிக்கிறது கெட்ட பழக்கம், ஆனா நான் குடிப்பேன் - வைரலான விஜய்சேதுபதி பேச்சு!

  இதை கண்டித்தும் தன்னை பார்வையாளர்கள் சந்திக்க அனுமதி வழங்கக் கோரியும் சவுக்கு சங்கர் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். இன்று மூன்றாவது நாளாக அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Health, Jail, Savukku Shankar