ஹோம் /நியூஸ் /கடலூர் /

சிதம்பரத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை... உங்க ஏரியா இருக்கானு பாருங்க..

சிதம்பரத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை... உங்க ஏரியா இருக்கானு பாருங்க..

மாதிரி படம்

மாதிரி படம்

Chidambaram Power Cut | சிதம்பரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chidambaram, India

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (15.10.2022)  (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளுக்கு மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதையும் படிங்க : சிதம்பரம் பஸ் ஸ்டாப்பில் பள்ளி சீருடையில் தாலி கட்டிய விவகாரம்.. வீடியோ வெளியிட்ட நபர் கைது..!

 மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் :

சிதம்பரம் நகர பகுதிகள், அம்மாபேட்டை, வண்டி கேட், சி.முட்லூர், கீழ் அனுபவம்பட்டு, வக்கிரமாரி, மணலூர், வல்லம்படுகை, தில்லை நாயகபுரம், கீழ மூங்கிலடி, பிண்ணத்தூர், கிள்ளை, பிச்சாவரம், கவரப்பட்டு, நடராஜபுரம், கே.டி.மனை, சிவபுரி, மாரியப்பா நகர், அண்ணாமலை நகர், பெராம்பட்டு, கீரப்பாளையம், என்னா நகரம், கன்னங்குடி, வயலூர், சிலுவைபுரம், மேல மூங்கிலடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

First published:

Tags: Chidambaram, Local News, Power Shutdown