Home /News /cuddalore /

காவலர் குடியிருப்பு பகுதியில் போலீஸ்காரரின் தாய் காது அறுக்கப்பட்டு கொடூர கொலை - கடலூரில் அதிர்ச்சி

காவலர் குடியிருப்பு பகுதியில் போலீஸ்காரரின் தாய் காது அறுக்கப்பட்டு கொடூர கொலை - கடலூரில் அதிர்ச்சி

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Cuddalore : கடலூர் காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தாய் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பின்பகுதியில் காவலர் குடியிருப்பு உள்ளது. அதில், கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக புதுநகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

துணை கண்காணிப்பாளர் சே.கரிகால்பாரி சங்கர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டனர். அப்போது, கால்கள் கட்டப்பட்ட நிலையில், காது அறுக்கப்பட்டு, முகத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் பண்ருட்டி அருகிலுள்ள காங்கிருப்பைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற காவலர் சதாசிவம் என்பவரின் மனைவி மலர்கொடி (50) என்பது தெரிய வந்தது. ஆயுதப்படை காவலரான இவரது மகன் சிவகுரு கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். அவர், அதேப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பிலும் வசித்து வருகிறார்.

கொலை செய்யப்பட்ட பெண்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிருப்பிலிருந்து மருத்துவமனைக்கு செல்வதற்காக சிவகுரு வீட்டிற்கு வந்திருந்தவர், கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது. எதற்காக, அவர் கொலை செய்யப்பட்டார், கொலையாளிகள் யார்? என்பது குறித்து கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Must Read : கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதிக்கான உரிமம் பெறவில்லை - விசாரணையில் தகவல்

காவலர் குடியிருப்பு பகுதியிலேயே போலீஸாரின் தாயார் காது அறுக்கப்பட்டு, கொடூரமானக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Cuddalore, Murder, Police

அடுத்த செய்தி