முகப்பு /செய்தி /கடலூர் / சாரை சாரையாக வந்த இளைஞர்கள்... கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்.. டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சாரை சாரையாக வந்த இளைஞர்கள்... கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்.. டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

TTF Vasan | யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது கடலூர் புதுநகர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் செந்தில் செல்லம் என்பவரது கடலூர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக வாசன் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று பல இடங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டது. போலீசார் அனுமதி இல்லாமல் பேனர் வைக்கப்பட்டதாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பேனர்களும் அகற்றப்பட்டன.

இந்த நிலையில் இன்று பிற்பகல் புதுப்பாளையம் பகுதியில் டிடிஎஃப் வாசன் (Youtuber TTF Vasan) ஆதரவாளர்கள் குவிந்து வந்தனர். இந்த நிலையில் காரில் வரும் டிடிஎஃப் வாசனை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் குவிந்தத்துடன் இரண்டு சக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தவும் செய்தனர். இதனால் புதுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Also Read : கரைவேட்டிக்கு மத்தியில் கேஷுவல் டிரஸ், ஜீன்ஸ் பேண்டுடன் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்!

இதனை தொடர்ந்து போலீசார் உடன் வந்தவர்களை வாகனங்களை எடுத்து சென்று அப்புறப்படுத்துமாறு பலமுறை கேட்டுக்கொண்டனர், ஒலிபெருக்கி மூலமும் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. போலீசார் உடனே வந்தவர்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமானார் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடினர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இய்க்கிய பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக கூட்டம் கூட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் உட்பட 3 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடலூர் புதுநகர் போலீசார் டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இயக்குனர் செந்தில் செல்லம் மற்றும் விக்னேஷ் ஆகிய மூன்று பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

First published:

Tags: Cuddalore, TTF Vasan