கடலூர் மாவட்டம், புவனகிரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் மாலையில் வீடு திரும்பும்போது பள்ளி அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் சண்டை போட்டுக் கொண்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் இரு மாணவர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பலமுறை எச்சரித்தும் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டதால். புவனகிரி காவல் ஆய்வாளர் சரஸ்வதி இரு பள்ளி மாணவர்களுக்கும் நூதன தண்டனை வழங்கினார். திருக்குறளில் உள்ள 20 குறளை பார்க்காமல் எழுதுச் சொன்னார்.
அப்போது இரு மாணவர்களும் அலைபேசி மூலம் பார்த்து எழுதியுள்ளனர். 20 முறை எழுத சொன்ன திருக்குறளை ஒரு முறை மட்டுமே எழுதியுள்ளனர். அப்படி எழுதிய திருக்குறளை படிக்க சொல்லியபோது, அதில் ஒரு மாணவன் எனக்கு படிக்கத் தெரியாது என்று கூறினான். மற்றொரு மாணவன் சரியாக படிக்காமல் தவறாக படித்தான். காவல் ஆய்வாளர் மாணவர்களை பார்த்து எந்த வகுப்பு படித்து வருகிறாய் என்று கேள்வி எழுப்பியபோது பன்னிரண்டாம் வகுப்பு என்று பதில் கூறினர்.
திருக்குறளை பார்க்காமல் எழுத சொன்னால் பார்த்து எழுதுவதும் பார்த்து படிக்க சொன்னால் எனக்கு படிக்கத் தெரியாது என்று கூறியதும் ஆய்வாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பத்தாம் வகுப்பு எப்படி தேர்ச்சி பெற்றாய் என்று கேட்டதற்கு நாங்கள் கொரோனா பேட்ச் என்று துணிச்சலாக பதில் அளித்தனர்.
Also see... சென்னையில் மின்தடை பகுதிகள் -உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!
மறுநாள் வரும்பொழுது 20 திருக்குறளையும் 20 தடவை எழுதி வர வேண்டுமென கூறி இரு மாணவர்களையும் அனுப்பி வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Fight, School students