முகப்பு /செய்தி /கடலூர் / கடலூரில் பாமக முழு அடைப்பு போராட்டம்... பாதுகாப்புடன் இயங்கும் பேருந்துகள்... 55 பேர் கைது..!

கடலூரில் பாமக முழு அடைப்பு போராட்டம்... பாதுகாப்புடன் இயங்கும் பேருந்துகள்... 55 பேர் கைது..!

இயல்பு நிலையில் கடலூர்

இயல்பு நிலையில் கடலூர்

PMK Protest Against NLC | பாமகவினர் வீதிவீதியாகச் சென்று போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் கீழ்வளையமாதேவி பகுதியில் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்கு நிலத்தை சமன்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பாமக இன்று  முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், என்எல்சியின் நிலப்பறிப்பு என்பது உழவர்களுக்கு எதிரான போர் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் கடைகள் இன்று வழக்கம் போல் திறந்திருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.  திறந்திருக்கும் கடைகளுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க; அண்ணாமலை செய்த ஊழல்கள் பட்டியலை வெளியிடுவேன்... ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!

இதற்கு ஏற்ப மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார். 9 மாவட்ட எஸ்.பி, 8 ஏ.டி.எஸ்.பி, 15 டி.எஸ்.பி, 54 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அச்சமின்றி இயல்பு வாழ்க்கையை தொடர காவல்துறை முழு பாதுகாப்பு அளிக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்போடு வழக்கம் போல் இயங்கி  வருகிறது. ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் இயங்கவில்லை. மேலும் கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தின் எதிரொலியாக பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்த 55 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்துள்ளனர்.

First published:

Tags: Cuddalore, NLC, PMK