ஹோம் /நியூஸ் /கடலூர் /

என்.எல்.சிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் - அன்புமணி எச்சரிக்கை

என்.எல்.சிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் - அன்புமணி எச்சரிக்கை

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு கடலூர் மாவட்ட மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் அன்புமணி ராமதாஸ்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Neyveli, India

  என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிலம் கொடுத்தவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக ஏமாற்றத்தையும், துரோகத்தையும் மட்டுமே பரிசாக அளித்த என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கூறும் ஆசை வார்த்தைகளுக்கு கடலூர் மாவட்ட மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

  இதையும் படிக்க : பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க சூர்யா சிவாவுக்கு தடை - அண்ணாமலை உத்தரவு

  நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி நீர்மட்டத்தை 1000 அடிக்கும் கீழே தள்ளியுள்ளதாகவும், ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலையும் சீரழித்து பாலைவனமாக்கி வருவதாகவும் சாடியுள்ளார்.

  கடலூர் மாவட்டத்தை அழித்துக் கொண்டிருக்கும் என்.எல்.சி நிறுவனம் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது தான் அனைத்து வகை சிக்கல்களுக்கும் தீர்வு என்று கூறியுள்ள அன்புமணி, என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் கொடுக்கும்படி மக்களை நெருக்கடிக்குள்ளாக்க கடலூர் மாவட்ட ஆட்சியரோ, நிர்வாகமோ முயன்றால் அதை பாட்டாளி மக்கள் கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் எச்சரித்துள்ளார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Anbumani ramadoss, Neyveli, NLC, PMK, Pmk anbumani ramadoss