என்.எல்.சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு உடந்தையாக இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி தனது இரண்டு நாள் நடைபயணம் இன்று தொடங்கினார். வானதிராயபுரம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்துடன் இந்த நடை பயணம் தொடங்கியது. இன்று வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி வரை நடைபயணம் நடைபெறுகின்றது.
இதில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்துக்காக 25,000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது, சுற்றுச்சூழலையும், நீர்வளத்தையும் அழிக்கும், கடலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாராத்தை கெடுக்கும் என்.எல்.சி நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பாமக தலைவர் அன்புமணி அளித்த பேட்டியில், “கோவை அன்னூர் சிப்காட்டிற்காக 1,500 ஏக்கர் நிலம் எடுப்பதற்கு எதிராக தலைவர்கள் போராடினர். கடலூரில் என்.எல்.சி நிர்வாகம் 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளது. நிலம் எடுப்பதற்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் போராடதது ஏன்?
என்.எல்.சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு உடந்தையாக இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சர்கள், மக்கள் நிலத்தை பிடுங்கி என்.எல்.சி நிர்வாகத்திற்கு கொடுக்க துடிப்பது ஏன்? என்.எல்.சி நிர்வாகம் நிலம் எடுப்பது தொடர்பாக அரசு வெற்று அறிவிப்புகளை வெளியிடுகிறது.
என்.எல்.சி 66 ஆண்டுகளில் பல 1000 கோடி லாபம் ஈட்டியுள்ளது. தனது லாபத்தை தமிழ்நாட்டில் முதலீடு செய்யவில்லை. கடலூர் மக்களுக்கு என்.எல்.சி நிர்வாகம் எதையும் செய்யவில்லை. தமிழருக்கு பணி வழங்கவில்லை.
ஏக்கருக்கு ரூ.25 லட்சம் தந்தாலும் சரி, ரூ.25 கோடி தந்தாலும் சரி எங்களுக்கு கவலையில்லை; தனியார் வசம் செல்லவுள்ள என்.எல்.சிக்கு ஏன் வேளாண் நிலத்தை கையகப்படுத்த வேண்டும்? என்.எல்.சி நிர்வாகம் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; கண் துடைப்பிற்காக, திசை திருப்பவே பணி வழங்குவதாக என்.எல்.சி கூறிகிறது. எங்களது கோரிக்கை என்.எல்.சி நிர்வாகம் வெளியேற வேண்டும் என்பதுதான்” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anbumani ramadoss, NLC, PMK