ஹோம் /நியூஸ் /Cuddalore /

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் - பெரும்பாலான மக்கள் கருத்து

சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் - பெரும்பாலான மக்கள் கருத்து

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

Chidambaram Natarajar Temple : சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என மனுக்கள் மூலம் ஏராளமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் குறித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் 2  நாளில் 6,607 ஆயிரம் மனுகள் அளித்துள்ளனர். அதில், பெரும்பாலானோர் கோவிலை அரசு கையகப்படுத்தி, இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை பொதுதீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வருகிறார்கள். இந்த கோவிலின் வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்வதற்காக கடந்த 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் வந்த இந்து சமய அறநிலையத்துறை குழுவினருக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வரவு-செலவு கணக்குகளையும் காண்பிக்கவில்லை.

இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கருத்து மற்றும் ஆலோசனையை பொதுமக்கள் ஜூன் 20, 21 ஆகிய தேதிகளில் கடலூர் புதுப்பாளையம் ஆற்றங்கரை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனுவாக அளிக்கலாம் என்றும், தபால் மற்றும் vocud.hrce@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் மாலை 3 மணிக்குள் அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இந்த சமய அறநிலையத்துறை விசாரணைக் குழுவினர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

இதில் சிறப்பு அதிகாரியும், மாவட்ட வருவாய் அலுவலருமான சுகுமார் தலைமையில் வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி, கடலூர் இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

20ஆம் தேதி காலை 10 மணியிலிருந்து கடலூர் மட்டுமின்றி வெளி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து கருத்து தெரிவித்து மனுக்களை இந்து அறநிலைத் துறை அதிகாரியிடம் கொடுத்து வந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகாரியிடம் மனு அளிப்பு

இதேபோல் மக்கள் அதிகாரம் அமைப்பினர், வள்ளலார் சங்கர் பிரதிநிதிகள் சத்யபாமா அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழ்த் தேசியப் பேரியக்கம் , தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, கம்யூனிஸ்ட் கட்சி, பிச்சாவரம் ஜமீன் தன்னார்வ அமைப்பினர், தமிழ் உணர்வாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கடலூர் புதுப்பாளையத்தில் அமைந்துள்ள இந்து அறநிலை துறை அலுவலகத்தில் இரண்டு நாட்களில் கருத்துக்களை கொடுத்து வந்தனர்.

Must Read : மேகதாது அணை விவகாரம்: துரைமுருகன் தலைமையிலான தமிழக குழு மத்திய அமைச்சருடன் இன்று சந்திப்பு

அதன்படி, 2 நாளில் நேரடியாக வந்த மக்கள் 1,409 மனுகள் கொடுத்துள்ளனர். தபால் மூலமாக 306 மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

மின்னஞ்சல் மூலமாக 4,892 மனுக்கள்  வந்துள்ளன. இதில் பெரும்பாலான மக்கள் உடனடியாக இந்து அறநிலைத்துறை கீழ் சிதம்பரம் நடராஜர் கோயிலை கொண்டுவரவேண்டும்,  ஆகம விதிகளை மீறி செயல்பட்ட தீட்சிதர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Chidambaram, Cuddalore, Temple