ஹோம் /நியூஸ் /கடலூர் /

விருத்தாசலம் அருகே பன்றி காய்ச்சலால் கூலி தொழிலாளி  ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விருத்தாசலம் அருகே பன்றி காய்ச்சலால் கூலி தொழிலாளி  ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Virudhachalam | பன்றி காய்ச்சலால்,  ஒருவர் உயிரிழந்து உள்ள நிலையில், அக்கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhachalam, India

  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவலூர் இருளர் கடருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் பாண்டியன் (52). கூலி தொழிலாளியான இவருக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.

  பின்னர் மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவருக்கு பன்றிகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், நேற்று மதியம் சென்னை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது உடல சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால்  பொதுமக்கள் அச்சமடைந்ததால் தொடர்ந்து, அவரது உடல் நேரடியாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்று, அதிகாலை அடக்கம் செய்யப்பட்டது.

  Also see...கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் சிறு குறிஞ்சி மலர்கள்..

  மேலும்  பன்றி காய்ச்சலால்,  ஒருவர் உயிரிழந்து உள்ள நிலையில், அக்கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

  செய்தியாளர்: பிரேம் ஆனந்த், கடலூர்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cuddalore, Fever