Home /News /cuddalore /

போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை' - ஆட்சியர் அலுவலகம் எதிரே பெண் நூதன போராட்டம்

போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை' - ஆட்சியர் அலுவலகம் எதிரே பெண் நூதன போராட்டம்

ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தையுடன் பிச்சை எடுத்த தாய்

ஆட்சியர் அலுவலகம் அருகே குழந்தையுடன் பிச்சை எடுத்த தாய்

போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை என அட்டை வைத்துக்கொண்டு இரண்டு மகன்களுடன் தாய் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

கடலூர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் பெண் தனது இரண்டு மகன்களுடன் திடீர் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அப்போது இரண்டு மகன்கள் கையில் வைத்திருந்த அட்டையில் போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை எனக்கு நீதியும் இல்லை என எழுதி இருந்தனர். மேலும் அந்தப் பெண் துண்டைத் தரையில் வைத்து பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

இதில் பண்ருட்டி கண்டரக்கோட்டையை சேர்ந்தவர் வசந்தி. எனது கணவர் பாரதிராஜா. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏற்கனவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் தெரிவித்து இருந்தார்.

தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாததால் புகார் குறித்து விசாரணை நடத்த வில்லை. ஆகையால் போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Also see... தமிழகத்தில் 3 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..

இதனையடுத்து அப்பெண்ணுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மகன்களுடன் தாய் தருணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Begger, District collectors, Office

அடுத்த செய்தி