கடலூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , ” கடலூர் நகரின் வளர்ச்சிக்காக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் புதிய பேருந்து நிலையம் அமைக்க 18 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தற்போது உள்ள திமுக அரசு திட்டமிட்ட அந்த இடத்தை விட்டு விட்டு அரசியல் காரணத்திற்காக எம்.புதூருக்கு மாற்ற நினைக்கிறது. இதை கண்டிக்கிறோம்” என்றார்.
மேலும் ,” எம்.புதூர் கிராம நகர பகுதியில் இருந்து அதிக தூரத்தில் உள்ளதால் இரவு நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை உருவாக்கி விடும். கர்ப்பிணி பெண்கள் உட்பட பேருந்தில் பயணித்து வரும் பல நோயாளிகள் மிகுந்த அவதிப்படுவார்கள், மேலும், தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில் அது மேலும் பல பிரச்னைகளை உருவாக்கும்.
புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் கடன் வாங்க வேண்டியிருக்கும். எம்.புதூருக்கு புதிய பேருந்து நிலையம் சென்றால் அந்த கடனைக் கூட திரும்ப அடைக்க முடியாத நிலை உருவாகி விடும். புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக வரும் 18 ஆம் தேதி பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொதுவாக மக்களின் கருத்தினை கேட்டு அதன்பின்னர் தான் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால், மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு மக்கள் கருத்து கேட்கும் விநோதமெல்லாம் இங்குதான் நடக்கிறது.
Also see...மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை (16-07-2022) முக்கிய பகுதிகளில் மின் தடை
இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் நிர்வாகிகள் பங்கேற்று எங்களது உறுதியான நிலைப்பாட்டினை தெரிவிப்பார்கள்.
ஏற்கனவே, தேர்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய பேருந்து நிலையம் அமைய வேண்டும். இல்லையென்றால் அதிமுக பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தும்.
மேயரிடம் நிர்வாக செயல் திறன் இல்லாததால் கடலூர் மாநகராட்சியே குப்பைக்காடாக கிடப்பதை காண முடிகிறது” என்றார். குறிப்பாக மேயரின் நிலை அந்தோ பரிதாபமாக உள்ளது என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Minister MC sambath, Omni Bus Stand