கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இதில், விருத்தசலம், திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்று கட்சியில் இருந்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், ஆண்கள் என பலர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் உறுப்பினர் அட்டை பெற்று கொண்டு கட்சியில் இணைந்தனர்.
இந்நிகழ்வில் பேசிய சீமான், தமிழ்நாட்டில் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என கூறினார். நாங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டில் பெரிய கட்சி என தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழ்நாட்டில் 2 கோடி வட மாநிலத்தவர்கள் வசித்து வருவதாக தெரிவித்தார்.
ராகுல் காந்தி கமல்ஹாசன் கூட்டணி வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது அவருடைய சொந்த விருப்பம் எதிர்காலத்தில் அவர்கள் கூட்டணி அமைக்கலாம் என தெரிவித்தார். பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது குறித்து பேசிய சீமான், மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்படுவது இலவசம் ஆகாது என்று கூறினார்.
தொடர்ந்து மக்கள் ஐடி வழங்குவது குறித்து பேசிய அவர், ஏற்கனவே ஆதார்அட்டையின் மூலம் பொதுமக்கள் மத்திய மாநில திட்டங்களில் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது தமிழக குடிமகன் என்பதற்கான அடையாள அட்டை வழங்க டெண்டர் விடப்பட்டிருப்பது கமிஷன் பெறவே என கூறினார்.
மேலும், ரயில்வேயில் உள்ள பணிகளுக்கு அந்தந்த மாநில பகுதியை சேர்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு இந்திக்காரர்களை தமிழகத்திலே பணியில் அமர்த்தி இருக்கிறது இது மிகவும் கண்டிக்கத்தக்கதே தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே ரயில்வே வேலைகளை தர வேண்டும் என தெரிவித்தார்.
செய்தியாளர்: பிரேமானந்த், கடலூர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Local News, Naam Tamilar Cadre, Naam Tamilar katchi, Seeman