முகப்பு /செய்தி /Cuddalore / ஹேப்பி பர்த் டே MSD..!- என்னோடு வா வீடு வரைக்கும்.. உனக்கும் தோனியை பிடிக்கும் - ரசிகரின் வெறித்தனம்

ஹேப்பி பர்த் டே MSD..!- என்னோடு வா வீடு வரைக்கும்.. உனக்கும் தோனியை பிடிக்கும் - ரசிகரின் வெறித்தனம்

தோனி ரசிகர்

தோனி ரசிகர்

MSDhoni : வீட்டில் ஹேப்பி பர்த்டே தோனி என்ற வாசகம் எழுதியதோடு மட்டும் இல்லாமல் தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

 தோனியின் 41வது பிறந்த நாளை முன்னிட்டு வீட்டை சுற்றி தோனி படம் வரைந்து அசத்திய ரசிகர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார் ‌ இவர்  கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஆவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோனி மீது உள்ள  தீவிர பற்றால்  தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் கலரான மஞ்சள் நிறத்தில்  வண்ணம்  அடித்து  வீட்டில் ஒரு பகுதியில்  டோனி படம் வரைந்து அசத்தினார். இதனால் உலக அளவில் உள்ள தோனி   ரசிகர்கள் கோபியை தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டினர் .மேலும் தோனியும் சமூக வலைத்தளம் மூலம்  நன்றி  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது ஆனாலும் மனம் தளராமல் தோனி மீது கொண்ட நீங்கா பற்றால்  தற்போது 07-07-2022   தேதி தோனி  41வது  பிறந்த நாளை  முன்னிட்டு கோபி  தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலரில்  மாற்றியதோடு மட்டும் அல்லாமல் தனது வீட்டில் ஹேப்பி பர்த்டே தோனி என்ற வாசகம் எழுதியதோடு மட்டும் இல்லாமல் தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்துள்ளார்.

மேலும்  இவரது காரில் தோனி படம் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதனால் இவரது வீட்டை இப்பகுதி கிரிக்கெட் ரசிகர்கள்  இவரது வீட்டில் வரைந்து கொண்டு உள்ள  தோனி படம் மற்றும் கோபிகிருஷ்ணனுடன்  செல்பி எடுத்து செல்கின்றனர்.

First published:

Tags: Birthday, Dhoni batting, Happy BirthDay, Mahendra singh dhoni, MS Dhoni