முகப்பு /செய்தி /கடலூர் / ”யார்கிட்ட போன்ல பேசுற..” மருமகளின் கண், பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார்... நடத்தையில் சந்தேகத்தால் ஆத்திரம்..!

”யார்கிட்ட போன்ல பேசுற..” மருமகளின் கண், பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றிய கொடூர மாமியார்... நடத்தையில் சந்தேகத்தால் ஆத்திரம்..!

மருமகள் - மாமியார்

மருமகள் - மாமியார்

Cuddalore acid attack | ஆசிட் வீச்சில் கீர்த்திகாவின் வலது கண் பார்வை பறிபோன நிலையில், அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

விருத்தாசலம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முகேஷ்ராஜ் அவிநாசியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கீர்த்திகா, மாமியார் மாமனாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஞாயிறன்று கணவருடன் வெளியே சென்றிருந்த மாமியார் ஆண்டாள், நள்ளிரவு 12 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது, மருமகள் கீர்த்திகா செல்போனில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆண்டாள், ஆசிட்டை எடுத்து வந்து கிருத்திகாவின் கண், காது மற்றும் பிறப்புறுப்பில் ஊற்றியுள்ளார். மேலும், கொசு விரட்ட பயன்படுத்தப்படும் ரசாயனத்தை கிருத்திகாவின் வாயில் ஊற்றி கொலை செய்ய முயன்றுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கீர்த்திகாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆசிட் ஊற்றியதில் கீர்த்திகாவின் வலது கண் பார்வை பறிபோன நிலையில், அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி தனியார் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே விருத்தாசலம் காவல் நிலையத்தில் சரணடைந்த மாமியார் ஆண்டாளை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Acid attack, Crime News, Cuddalore