Home /News /cuddalore /

புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தல்.. சினிமா பாணியில் 10 கி.மீ விரட்டி சென்று பிடித்த போலீசார்

புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தல்.. சினிமா பாணியில் 10 கி.மீ விரட்டி சென்று பிடித்த போலீசார்

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு 2000க்கும் மேற்பட்ட சாராயப் பக்கெட்டுகள் கடத்தல்... சினிமாவை போல விரட்டி பிடித்த போலீசார்...

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு 2000க்கும் மேற்பட்ட சாராயப் பக்கெட்டுகள் கடத்தல்... சினிமாவை போல விரட்டி பிடித்த போலீசார்...

Cuddalore | புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு 2000க்கும் மேற்பட்ட சாராயப் பக்கெட்டுகள் கடத்தப்பட்டன. இதனை அறிந்த போலீசார் சினிமா காட்சிப்போல் 10 கிலோமீட்டர் தூரத்துக்கு விரட்டி சென்று பிடித்து அனைத்து சாராயப் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
    புதுவை மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக சாராய பக்கெட்டுகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் மதுவிலக்கு ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வரும் சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்றும் அதனைத் தொடர்ந்து பொலீரோ வாகனம் ஒன்றும் வேகமாக வந்தது. போலீசார் நிறுத்திய போது இந்த வாகனங்கள் நிற்கவில்லை இதனால் உஷார் அடைந்த போலீசார் இரண்டு வாகனங்களையும் 10 கிலோமீட்டர் தொலைவிற்கு விரட்டிச் சென்றனர்.

    அப்போது காரைக்காடு என்ற பகுதியில்   இரண்டு வாகனங்களை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்தவர்கள் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார்  வாகனத்தை சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக சாராயப் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    அதன் பிறகு பிக்கப் வாகனம் மூலம் இந்த இரண்டு வாகனங்களையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து உள்ளே இருந்த 2000 க்கும் மேற்பட்ட சாராயப் பாக்கெட்டுகளை கைப்பற்றி இதனை கடத்தி வந்தவர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்


    Also see... கனமழையால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு...

    முதற்கட்ட விசாரணையில் கடலூர் பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்த ஐந்து பேர் இதில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: பிரேம் ஆனந்த், கடலூர்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Crime News, Cuddalore, Puducherry

    அடுத்த செய்தி