ஹோம் /நியூஸ் /கடலூர் /

பண்ருட்டியில் விஷத் தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...

பண்ருட்டியில் விஷத் தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி...

தேனீ கொட்டியதில் காயம்

தேனீ கொட்டியதில் காயம்

Cuddalore | பண்ருட்டி அருகே கோவிலில் காது குத்தும் நிகழ்ச்சியின் போது விஷத் தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்டோர் வாந்தி மயக்கம் எடுத்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர்கள் முரளி - நித்தியா தம்பதியினர். இவர்களது இரண்டு மகன்களுக்கும் பண்ருட்டி அடுத்த திராசு பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில்  மொட்டை அடித்து காது குத்தும் விழா ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது  சிறுவர்களுக்கு மொட்டை அடித்துக் கொண்டிருக்கையில் உறவினர்கள் சிலர் அடுப்பை மூட்டி படையலுக்கு தேவையான பொங்கல் சமைத்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது அடுப்பில் இருந்து வெளியேறிய புகைமூட்டம் அருகில் இருந்த மரத்தில் சூழ்ந்தவுடன்  எதிர்பாராத விதமாக மரத்திலிருந்த விஷத் தேனீக்கள் அங்கு இருந்தவர்களை கொட்டியது. இதில்  20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

Also see... இன்றைய ( 03-10-2022) தலைப்பு செய்திகள்..!

இச்சம்பவம் குறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Bee, Cuddalore