தமிழகத்தில் ஜல்லிக்கட்டு எப்படியோ அப்படிதான் கபடி விளையாட்டும் வீரத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்போல், கபடியில் வீரர்களே ஜல்லிக்கட்டு காளைகளாக மல்லுக்கட்டிக் கொள்வார்கள். இதற்காக உயிரை கொடுத்து விளையாடுவோம் எனக்கூறும் அளவுக்கு அந்த விளையாட்டின் மேல் அதீத ஈர்ப்பு கொண்டவர்கள் தமிழக கபடி வீரர்கள்.
ஆனால் அந்த வார்த்தை நிஜமாகும்போது அளப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது. வெண்ணிலா கபடி குழு படத்தில் கதாநாயகனாக வரும் விஷ்ணு விஷால் களத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும்போதே உயிரிழந்துவிடுவார். அந்த காட்சி நெகிழ்ச்சையை ஏற்படுத்துவதாக இருந்தது. அனால், அதேபோல் நிஜத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடந்துள்ள சோக சம்பவம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் புறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ் (வயது 21). கபடி அணி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்து கொண்டு விளையாடினார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால், அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு உடனே, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனை பின்னர் உடல் சொந்த கிராமத்திற்ககு கொண்டு வரப்பட்டது. பின்னர் கிராம மக்கள் மற்றும் உறவினர் நண்பர்கள் கதறி அழுது அஞ்சலி செலுத்தினர் மேலும் கல்லூரி நண்பர்கள், சக கபடி வீரர்கள் என அணைவரும் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜ் இறுதிச் சடங்கின்போது அவரின் உடலுடன், அவர் கடந்த முறை வென்ற முதல் பரிசையும் சேர்த்து வைத்து நல்லடக்கம் செய்தனர்.
Must Read : எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஜேஆர்டி ரியல் எஸ்டேட் நிறுவன கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை
இந்நிலையில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் மறைந்த கபடி வீரர் விமல்ராஜ் வீட்டிற்குச் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் தனது சொந்த நிதியில் இருந்து 50,000 ரூபாய் ரொக்கப் பணத்தை குடும்பத்தினருக்கு வழங்கினார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விமல்ராஜ்க்கு தாய், தந்தை (கண்பார்வையற்றவர்) தங்கை உள்ளனர். இவர்கள் வாழ்வாதராம் விமல்ராஜை நம்பிதான் இருந்தது. ஆனால் அவர் கபடி விளையாடும் களத்திலேயே உயிரிழந்துவிட்டார். இதனால், வாழ்வாதாரம் இழந்து நிற்கதிகாய நிற்கும் அவரின் குடும்பத்திற்கு அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்களும் நண்பர்களும், சக விளையாட்டு வீரர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Kabaddi, Sports Player