Home /News /cuddalore /

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: சுமூக தீர்வு காணப்படும்.. அமைச்சர் சேகர் பாபு உறுதி

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: சுமூக தீர்வு காணப்படும்.. அமைச்சர் சேகர் பாபு உறுதி

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளவே அப்படி பேசியுள்ளார்.மற்ற  ஆதீனங்கள், ஜீயர்கள், தீட்ஷிதர்கள்  அரசோடு இணக்கமாக உள்ளனர். திமுக அரசு அமைவதற்கு தீட்ஷீதர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில்  அனைவருக்கும் சாதகமான சுமூக தீர்வு காணப்படும் என்றும் மதுரை ஆதீனம் தன்னை முன்னிலை படுத்திகொள்ளும் விதமாக பேசி வருவதாகவும்  இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு  தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையால் உருவாக்கப்பட்ட குழுவினர் நாளை, நாளை மறுதினம் ஆய்வு செய்ய உள்ளதாக கடந்த மாதம் 26ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதற்கு  சிதம்பரம் நடராஜர் கோவில் தரப்பி,  2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கடந்த மாதம் 30ம் தேதி இந்து சமய அறநிலைய ஆட்சித் துறைக்கு ஆட்சேபனை கடிதம் ஒன்றை எழுதினர்.

தொடர்ந்து அதற்கு பதில் அளித்து இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை கமிஷனர் கண்ணன் நோட்டீஸ் ஒன்றை  அனுப்பினர். அதைத் தொடர்ந்து தீட்சிதர்கள் பதில் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர் அதில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தற்போது எடுக்கப்பட்ட துறைரீதியான நடவடிக்கைகளை திரும்ப பெறவும் அராசணையை திரும்ப பெறவும் மீண்டும் கோரப்பட்டது.. தவறினால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என பொதுதீட்சிதர்களின் செயலாளர் எஸ்.ஹேமசபேச தீட்சிதர் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இந்து சமய அறநிலைய  துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் வருகை புரிந்தார். தொடர்ந்து நடராஜர் கோயில் உள்ளே சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோயில் உள்ளே அமர்ந்து தீட்சிதர்கள் இடையே ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் நாளை நடைபெறவுள்ள இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து தீட்ஷீதர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது அதனை சட்டப்படி எதிர் கொள்வதாக தீட்ஷீதர்கள் தெரிவித்தனர்.அனைவரும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என கூறிய அமைச்சர் அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.

மேலும் படிக்க: பாஜக தலைவர்கள் கூட முதல்வர் ஸ்டாலினை பெருமையாக பேசுகின்றனர் - அமைச்சர் மெய்யநாதன்

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  சேகர்பாபு, தீட்ஷீதர்கள் தங்களின் நிலைபாடு குறித்து தெரிவித்தனர்.  அரசின் நிலைபாடு,  இந்து சமய அறநிலையதுறை சட்டங்கள் குறித்து நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். விரைவில் சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து தரப்பினருக்கும் சாதகமான சுமூக தீர்வு ஏற்படும் என்றார்.

இந்து சமய அறநிலைய துறை கொள்ளைகாரர்களின் கூடாரமாக உள்ளது என மதுரை ஆதீனம் பேசியது குறித்த கேள்விக்கு
மதுரை ஆதீனம் தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளவே அப்படி பேசியுள்ளார்.மற்ற  ஆதீனங்கள், ஜீயர்கள், தீட்ஷிதர்கள்  அரசோடு இணக்கமாக உள்ளனர். திமுக அரசு அமைவதற்கு தீட்ஷீதர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

இதை படிக்க: இந்து சமய அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் - மதுரை ஆதீனம்

எனவே ஒருவர் பேசியதற்காக மற்றவர்களையும் சேர்த்து குறைகூற கூடாது. அவரது பேச்சுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் மதுரை ஆதீனமும் தமிழக அரசையும், அரசியல்வாதிகளையும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலை ஏற்படும்.
அந்த அளவிற்கு தமிழக முதல்வர் அனைவருக்குமான ஆட்சியை செய்து வருகிறார் ஆத்தீகர்கள், நாத்தீகர்கள் என அனைவருக்கும் சமமான ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி உள்ளது என்றார்.

 
First published:

Tags: Chidambaram, Hindu Temple, Minister Sekar Babu

அடுத்த செய்தி