கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புறங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் விமல்ராஜ் கடந்த 25ஆம் தேதி கபடி விளையாடும் போது களத்திலேயே உயிர் இழந்தார். அவரின் மரணம் சக விளையாட்டு வீரர்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தது மட்டுமல்லாமல், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கபடி வீரர் விமல்ராஜ் வீட்டிற்கு வருகை தந்து மறைந்த விமல்ராஜ் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதி 3 லட்சத்திற்கான காசோலையை விமல்ராஜின் பெற்றோர்களிடம் வழங்கினார். மேலும் அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியில் இருந்து 2 லட்சம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கனேசன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கபடி வீரர் விமல்ராஜின் திருஉருவப்பட திறப்பு நிகழ்ச்சியில் கலந்து அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர். அப்போது, 2 நிமிடம் மொளன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.
Must Read : காதல் உண்மையென்றால் மார்பில் பச்சைக்குத்து.. காதலன் டார்ச்சர் - காதலி செயலால் பரபரப்பு
அப்போது, உயிரிழந்த கபடி வீரர் விமல்ராஜின் குடும்பத்திற்கு அரசு சார்பில் மாற்று குடியிருப்புக்கு ஏற்பாடு செய்து, தொகுப்பு வீடு வழங்கப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள இந்த அரசு, இனி விளையாட்டு வீரர்களுக்கான காப்பீடு திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Kabaddi, Sports, Sports Player