ஹோம் /நியூஸ் /கடலூர் /

“வெள்ள பாதிப்புகளுக்கு நிதி’’ மத்திய அரசா.. மாநில அரசா? வார்த்தைப்போரில் அண்ணாமலை - மெய்யநாதன்!

“வெள்ள பாதிப்புகளுக்கு நிதி’’ மத்திய அரசா.. மாநில அரசா? வார்த்தைப்போரில் அண்ணாமலை - மெய்யநாதன்!

அண்ணாமலை, அமைச்சர் மெய்யநாதன்

அண்ணாமலை, அமைச்சர் மெய்யநாதன்

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கிறது என அமைச்சர் மெய்யநாதன் குற்றம்சாட்டினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிதியில் இருந்தே முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் வழங்கி வருகிறார் என அண்ணாமலை கூறிய நிலையில் மத்திய அரசு எந்த சிறப்பு நிதியும் ஒதுக்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

  கடந்த வாரம் பெய்த கனமழையால் கடலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடலூரில் பெய்த அதீத கனமழையால், சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அதில் விளை நிலங்கள் சேதமடைந்தன, வீடுகள் தண்ணீரில் மூழ்கின.

  இந்நிலையில் சீர்காழி அடுத்த கொடிக்கால்வெளி கிராமத்தில் மழை, வெள்ளத்தால் சேதமடைந்த குடியிருப்புகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு, கிராம மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

  தொடர்ந்து நல்லூர் பகுதியில் கனமழையால் சேதமடைந்த விளைநிலங்களை அண்ணாமலை பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

  சபரிமலை மண்டல பூஜை: இன்று மட்டும் 50,000 பேர்.. விரதத்தை தொடங்கிய பக்தர்கள்! (news18.com)

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு வழங்கிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தே, வெள்ள நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றார். மேலும் மாநில அரசு தன் பங்கிற்கு என்ன செய்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

  வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு எந்த சிறப்பு நிதியும் வழங்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் விளக்கமளித்துள்ளார். சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Annamalai, Flood, Minister Meyyanathan