தமிழகம் முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்யும் இடங்களில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் கடலூரில் பேட்டியளித்தபோது தெரிவித்தார்.
கடலூர் எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு தயாரிக்கும் இடத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். லேசான காயங்களுடன் ஒருவர் கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடலூர் அரசு தலைமை மருத்துவமனை இன்று வந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெடிவிபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்த மற்றவர்களின் கிராமங்களுக்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது, தனது சொந்த நிதியிலிருந்து தலா 15,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கி அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கணேசன், கடலூர் மாவட்டத்தில் எம்.புதூர் கிராமத்தில் எதிர்பாராவிதமாக பட்டாசு செய்கின்ற இடத்தில் திடீர் விபத்து ஏற்பட்டு அதன் மூலமாக 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதை அறிந்த முதல்வர் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் உடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கிறார்கள்.காயமடைந்தவருக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.
முதலமைச்சரின் இந்த உத்தரவின்பேரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளேன். மேலும், பட்டாசு உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர்கள் அரசின் முழு அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக இதுபோன்று பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்ற இடங்களில் பட்டாசு உற்பத்தி செய்கின்ற உற்பத்தியாளர்கள் , நிறுவனங்கள் மீது அந்த கடைகளின் மீது முறையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
குறிப்பாக வருகின்ற தீபாவளிக்கு நேரத்தில் அதிகமான அளவு பட்டாசு உற்பத்தி செய்யப்படும். தமிழ்நாட்டில், குறிப்பாக விருதுநகர் மாவட்டம் மற்றும் உற்பத்தி செய்யும் பிற இடங்களிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும் சென்று முறையாக ஆய்வு செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Must Read : தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் மனு
மேலும், முழுமையாக பாதுகாப்பு இல்லாத இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Fire accident, Firecrackers