ஹோம் /நியூஸ் /கடலூர் /

திருமணமான 18 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - சந்தேக மரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

திருமணமான 18 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - சந்தேக மரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு

தற்கொலை செய்துக்கொண்ட பிரவீனா

தற்கொலை செய்துக்கொண்ட பிரவீனா

Crime : காட்டுமன்னார்கோவிலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  திருமணமாகி 18 மாதங்கள் ஆகிய நிலையில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் ஞானவினாயகர் கோவில் தெருவில் வசிப்பவர் பரசுராமன். இவர் புதுக்கோட்டையில்  தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரவீனா(26) .சீர்காழி பகுதியை சேர்ந்த   பிரவீனாவுக்கும் பரசுராமனுக்கும்  திருமணம் ஆகி 18 மாதங்கள் கடந்த நிலையில் இவர்களுக்கு   ஹரிமித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.

  Read More : போலீஸ்காரர் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து வழிப்பறி முயற்சி.. சைரன் அடித்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்

  இந்நிலையில் கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதால் பிரவீனா அவரது மாமனார் முருகேசன் மாமியார் விஜயாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். யாரும் எதிர்பாராத விதமாக பிரவீனா மர்மமான முறையில் வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் இதுகுறித்து பிரவீனாவின் உறவினருக்கு தகவல் அளித்தனர்.

  பிரவீனாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பாதாக பெண்ணின் உறவினர்கள்  காட்டுமன்னார்கோவில் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி ரூபன் குமார்  உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.அதனையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி  விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Cuddalore, Kattumannarkoil Constituency, Tamil Nadu