ஹோம் /நியூஸ் /கடலூர் /

போதையில் பாம்பை பிடித்து விளையாட்டு.. படாரென கடித்த கண்ணாடி விரியன் பாம்பு.. புத்தாண்டில் சோகம்!

போதையில் பாம்பை பிடித்து விளையாட்டு.. படாரென கடித்த கண்ணாடி விரியன் பாம்பு.. புத்தாண்டில் சோகம்!

பாம்பு கடித்து உயிரிழந்த நபர்

பாம்பு கடித்து உயிரிழந்த நபர்

அந்தப் பாம்பு அவரை கடித்த நிலையிலும், பாம்பினை அங்கிருந்தவர்களிடம் இது உங்களுக்கு புத்தாண்டு பரிசு என காட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தன்னை பிடித்து விளையாடிய போதை ஆசாமியை பாம்பு கடித்துக் கொன்றதுகடலூரில் மது போதையில் பொதுமக்களுக்கு புத்தாண்டு பரிசு என கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து விளையாடிய இளைஞர் பாம்பு கடித்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயன் நகரை சேர்ந்த மணிகண்டன் நேற்று இரவு மதுபோதையில் அப்பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்தப் பகுதி வழியாக சென்ற கண்ணாடி விரியன் பாம்பை ஆர்வமாக சென்று பிடித்துள்ளார்.

அந்தப் பாம்பு அவரை கடித்த நிலையிலும், பாம்பினை அங்கிருந்தவர்களிடம் இது உங்களுக்கு புத்தாண்டு பரிசு என காட்டியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதைத்தொடர்ந்து அந்த பாம்புடன் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் அவருடன் வந்த கபிலன் என்பவரையும் பாம்பு கடித்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த பாம்பினை அடித்து கொன்றுவிட்டனர்.

First published:

Tags: Bite, Cuddalore, New Year Celebration, Snake