முகப்பு /செய்தி /கடலூர் / வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட திட்டம் - கடலூரில் மூவர் கைது

வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட திட்டம் - கடலூரில் மூவர் கைது

கடலீரில் ஏராளமான போலீசார் குவிப்பு...

கடலீரில் ஏராளமான போலீசார் குவிப்பு...

கள்ளகுறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் கடலூர் வெள்ளி கடற்கரையில் ஒன்றிணைவோம் என குருப் உருவாக்கிய வாலிபர் உட்பட கடலூரில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடற்கரைக்கு யாரும் செல்லக்கூடாது என செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 13-ம் தேதி  12-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு அவரது  குடும்பத்தினருக்கு  ஆதரவாக மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அந்த போராட்டம் கலவரமாக மாறியது.  கலவரத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு கடலூர் வெள்ளி கடற்கரையில் ஒன்றிணைவோம் என வாட்ஸ்அப் குரூப் உருவாக்கி போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்ட  முற்போக்கு அமைப்பை சேர்ந்த  சேர்ந்த விஜய் என்ற  இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக கடலூரை சேர்நத தினேஷ், கார்த்திக் ஆகியோரையும் கடலூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடலூர் வெள்ளி கடற்கரை

இதனைத்தொடர்ந்து கடலூர் வெள்ளிகடற்கரைக்கு மாணவர்கள் இளைஞர்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் கடற்கரையோரம் அமைந்துள்ள பெரியார் கலை கல்லூரி நுழைவு வாயலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடற்கரைக்கு செல்லும் சாலைகளில் போலீசார் தீவிர வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also see... அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி...

இதேபோல் உயிரிழந்த மாணவியின் சொந்த ஊரான வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் சிலர் போராட்டம் நடத்த உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவரது வீட்டிற்குச் செல்லும் சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Cuddalore, Kallakurichi