கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயமாதவசாரதி. இவர், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கொடுத்த புகாரில், ”விருத்தாச்சலம் வட்டம் பெருவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி விண்ணரசி என்பவர்கள் தனக்கு நண்பர் மூலம் அறிமுகமானவர்கள். இதில் விண்ணரசி துணை ஆட்சியராக இருப்பதாகவும் தனக்கு தமிழக அரசு அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் என பல அதிகாரிகள் நன்கு பழக்கமாக உள்ளனர். அவர்கள் மூலமாக உங்களுக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினார்.
மேலும் மத்திய அரசு பணியில் அசிஸ்டன்ட் டைரக்டர் பணியிடம் காலியிடமாக இருப்பதாகவும் அந்த பதவிக்கு பணி அமர்த்த இருப்பதாகவும் 11 லட்சம் ரூபாய் கொடுத்தால், மத்திய அரசு வேலை வாங்கி கொடுத்து விடுவேன் என்று தன்னிடம் கூறி சிறுக சிறுக 11 லட்சத்தை வாங்கினார். பின்னர் 11 லட்சத்தை பெற்றுக் கொண்ட சுதாகரன் மற்றும் அவரது மனைவி சகாய விண்ணரசி சொன்னபடி எந்த வேலையும் வாங்கி தராமல் ஏமாற்றி மோசடி செய்து விட்டனர்.
எனது பணத்தை திரும்பி கேட்டு வந்ததால் ஒரு லட்சத்தை மட்டுமே திரும்பிக் கொடுத்துவிட்டு ரூபாய் 10 லட்சத்திற்கு காசோலை வழங்கினார்கள். மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் பலரிடம் 40 லட்சத்திற்கும் மேல் பல நபரிடம் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார்” என மனுவில் அவர் தெரிவித்தார்.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சுதாகர் மற்றும் விண்ணரசி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்தது உண்மை என தெரிய வந்தது.
அதனால் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சுதாகர் மற்றும் சகாய விண்ணரசியை கைது செய்து விசாரணை செய்தனர். இதில் விண்ணரசியின் முதல் கணவர் சகராஜ் என்பவர் இறந்துவிட்ட நிலையில் தனக்கு 2014 ம் ஆண்டு மிலிட்டரி கேண்டினில் மேனேஜர் வேலை வழங்கப்பட்டதை வேண்டாம் என கூறியுள்ளார் .
பின்னர் சகாய விண்ணரசி சுதாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு வேலையில்லாமல் இருந்து வந்த நிலையில் சுதாகரும் விண்ணரசியும் திட்டமிட்டு சிதம்பரம் மற்றும் சேத்தியாதோப்பு பகுதியைச்சேர்ந்த நபர்களிடம் தான் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டருக்கு நேர்முக உதவியாளராக இருப்பதாகவும், சப் கலெக்டர் ஆக பணி புரிவதாகவும் சொல்லியுள்லனர்.
Also see... பொள்ளாச்சியில் இளைஞர்களுக்கு இலவச திறன்மேம்பாட்டு பயிற்சி
பின்னர் ஆவர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்து ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் வீடுகளை மாற்றி வடலூர் , சிதம்பரம் பகுதிகளில் மாறி மாறி குடியிருந்து கொண்டு ஏமாற்றிய பணத்தில் மேற்படி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர் என்பது தெரியவந்தது. இந்த விசாரணையின் இறுதியில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating case, Cuddalore, Job