ஹோம் /நியூஸ் /கடலூர் /

''டும்..டும்.. தண்ணி தேங்குது''.. குடியிருப்புகளில் மழைநீர்.. நீருக்குள் நின்று தவில் அடித்த வித்வான்!

''டும்..டும்.. தண்ணி தேங்குது''.. குடியிருப்புகளில் மழைநீர்.. நீருக்குள் நின்று தவில் அடித்த வித்வான்!

மழைநீரில் நின்று வாசிக்கும் தவில் வித்வான்

மழைநீரில் நின்று வாசிக்கும் தவில் வித்வான்

தவில் வித்வான் ராமலிங்கம் என்பவர் வடிகால் குறித்து நடவடிக்கை வேண்டி அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பதற்காக தண்ணீரில் நின்று தவில் அடித்து தனது கோரிக்கையை முன் வைத்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Cuddalore, India

  கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். இதனால்  தனியார் மண்டபம் அருகே பத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் மழை வந்தாலே வருடம் வருடம் தங்களுக்கான இந்த பிரச்சனை உருவாகி வருகிறது எனக் கூறுகின்றனர் கோதண்டவிளாகம் கிராம மக்கள்.

  மேலும் தண்ணீர் 5 அடிக்கு மிகாமல் இருப்பதால் அடிப்படை வசதி இன்றி தவிக்கும் தங்களுக்கு உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்,

  தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படும் அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் மின் கம்பங்கள் அருகில் இருப்பதால் மின்சாரம் தண்ணீரில் பாய்ந்து உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்,

  பலமுறை அதிகாரிகளிடமும் ஊராட்சி நிர்வாகத்திடமும் கூறியும் எந்த ஒரு பலனும் இன்றி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.  போர்க்கால அடிப்படைகள் உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  Also see... புயலுக்கு வாய்ப்பு? அடுத்த மழை ரெடி.. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

  இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்நத தவில் வித்வான் ராமலிங்கம் என்பவர் நடவடிக்கை வேண்டி அதிகாரியின் கவனத்தை ஈர்ப்பதற்காக தண்ணீரில் நின்று தவில் அடித்து தனது கோரிக்கையை முன் வைத்தார். தொடர்ந்து தண்ணீர் தேங்குவதாகவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Cuddalore, Heavy Rainfall