Home /News /cuddalore /

துபாய் கடத்தல் தங்கத்தை தேடி கடலூர் வந்த கும்பல்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - போலீசார் விசாரணை

துபாய் கடத்தல் தங்கத்தை தேடி கடலூர் வந்த கும்பல்.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - போலீசார் விசாரணை

தங்க கடத்தல் கும்பல்

தங்க கடத்தல் கும்பல்

Crime: துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கத்தை தேடி கடலூர் வந்த கும்பல் போலீசில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்லது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள தே.புடையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலையா (வயது 38).  இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் துபாய்க்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு ஏஜென்சி நிறுவனம் கூறியபடி வேலை கிடைக்கவில்லை. துபாயில் பாலையா கட்டிடவேலை செய்து வந்தார். அப்போது அங்குள்ள நிறுவனம் பாலையாவின் பாஸ்போட்டை பறிமுதல் செய்தது. இதனால் செய்வது அறியாமல் தவித்து வந்த பாலையாவிடம் நாங்கள் உனக்கு உதவுகின்றோம் நீ நாங்கள் சொல்வது போல் செய்  ஒரு கும்பல் கூறியுள்ளது.

எப்படியாவது ஊர் சென்றால் போதும் என இருந்த பாலையாவிடம் நீ ஊருக்கு செல்லவேண்டும் என்றால் நாங்கள் கொடுக்கும் பெட்டியை குறிப்பிட்ட நபரிடம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதனை நம்பிய பாலையா அந்த நபர்கள் கொடுத்த பெட்டியுடன் துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடந்த 14-ந் தேதி வந்து இறங்கினார். அப்போது சுதந்திர தின விழாவையொட்டி பயங்கர சோதனை நடந்தது. ஆனால் பாலையாவிடம் தெரிவித்த படி ஒரு நபரும் அங்கு வரவில்லை.

பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட தங்க கட்டிகள்: 

இதனால் சந்தேகம் அடைந்த பாலையா அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் தங்க கட்டிகள், சாக்லேட்டுகள் மற்றும் பேரிச்சம் பழங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எனினும் பாலையா லாவகமாக தப்பி பெட்டியுடன் ஊருக்கு திரும்பினார். அப்போது தான் வைத்திருந்த பெட்டியை கருவேப்பிலங்குறிச்சி அருகே பேரலையூர் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டில் கொடுத்தார். மேலும் ஊருக்கு திரும்பியதை சொல்ல வேண்டாம் என தெரிவித்தார்.'

Also Read:  சென்னை வானகரத்தில் தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து - தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

இதனிடையே பாலையாவின் மனைவி திட்டக்குடி போலீசில் புகார் செய்தார். அந்த புகார் மனுவில் எனது கணவர் ஊருக்கு திரும்பியதாக தகவல் வந்தது. ஆனால் இதுவரை அவர் வரவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே துபாயில் இருந்து ராமநாதபுரத்தை சேர்ந்த கும்பலுக்கு பெட்டி கொடுத்து அனுப்பியவர்கள் தொடர்பு கொண்டு பேசியபோது பெட்டி வரவில்லை என்பதால் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்க பிஸ்கட்டை தேடிய கும்பல்:

இதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் இருந்து 9 பேர் கொண்ட கும்பல் திருச்சி விமானநிலையத்துக்கு சென்றது. அப்போது பாலையா வந்த கார் டிரைவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அந்த டிரைவர் பேரலையூர் கிராமத்தில் பாலையாவை இறக்கி விட்டதாக தெரிவித்தனர். உடனே அந்த கும்பல் பேரலையூர் வந்தது.

பாலையாவின் மாமனாரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அந்த கும்பல் அவரை அழைத்துக்கொண்டு பாலையாவின் சொந்த ஊருக்கு சென்றனர். அங்கு பாலையாவின் மனைவியிடம் 9 பேர் கொண்ட கும்பல் விசாரித்தனர். ஆனால் பாலையா மனைவி எனது கணவரை பற்றி எதும் தெரியவில்லை என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பாலையா மாமனாரிடம் விசாரித்த போது பெட்டி கொடுத்ததை ஒப்புக்கொண்டார். அந்த பெட்டியை எடுத்து வருவதாக மீண்டும் அவர்கள் கிராமத்திற்கு சென்றனர். இதில் ஒன்பது பேரில் 4 பேர் அவருடன் சென்றனர். அந்தப் பெட்டியை எடுத்து வந்தபோது அதனை வாங்கிக்கொண்டு நான்கு பேர் மட்டும் திடீரென காரில் இருந்து தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த  கிராம மக்கள் மீதமிருந்த ஐந்து பேரை பிடித்து வைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 5 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே திட்டக்குடி அருகே சாலை ஓரத்தில் ஒரு பெட்டி கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் உடன் அந்த பெட்டியை கைப்பற்றி போலீசார் திறந்து பார்த்தபோது அதில் சாக்லேட்டுகள் மற்றும் பேரிச்சம் பழங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

Also Read:  தினமும் ரூ.10 லட்சம் லாபம்.. ஸ்டாக் மார்க்கெட் டிரேடிங் - கோடிகளை சுருட்டிய கில்லாடி தம்பதி

இது பாலையா கொண்டு வந்த பெட்டி தான் என்பதை அறிந்து அவர்கள் உள்ளே இருந்த தங்கத்தை தேடி பார்த்த போது தங்கம் மட்டும் இல்லை. இதனை தொடர்ந்து அந்த தங்கத்தை எடுத்துக்கொண்டு அந்த நான்கு பேரும் தப்பியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதில் இருந்த தங்கத்தின் மதிப்பு எவ்வளவு என்பது தெரியவில்லை. மேலும் அந்த ஊரில் பிடித்து வைத்திருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பிச் சென்ற பாலையாவையும் தற்போது கைது செய்துள்ளனர். அவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் சினிமா சம்பவம் போல் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Cheating case, Crime News, Gold Biscuit, Gold Robbery

அடுத்த செய்தி