முகப்பு /செய்தி /கடலூர் / அதிமுக போராட்டம் முடிந்து திரும்பியபோது விபத்து - 4 வயது சிறுமி உயிரிழப்பு

அதிமுக போராட்டம் முடிந்து திரும்பியபோது விபத்து - 4 வயது சிறுமி உயிரிழப்பு

உயிரிழந்த சிறுமி சமித்தா

உயிரிழந்த சிறுமி சமித்தா

போராட்டம் முடிந்து அதிக மக்களை ஏற்றி வந்ததால் விபத்தில் 4 வயது சிறுமி உயிரிழப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhachalam, India

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் மோதி 4 வயது சிறுமி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் திமுக அரசின் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டித்தும், தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

போராட்டம் முடிந்த பிறகு, போராட்டத்தில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்டோர் சிறிய சரக்கு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது அந்த வாகனம் கருவேப்பிலங்குறிச்சி அடுத்து செல்லும் போது, சாலையில் சென்றுகொண்டிருந்த வண்ணான்குடிகாடு பகுதியை சேர்நத நீலகண்டனின் 4 வயது சிறுமி சமித்தா மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்தில் சிறுமி உயிரிழந்தார்.

விதிகளை மீறி டாட்டா ஏசி வாகனத்தில் அதிக மக்களை ஏற்றி சென்றதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

First published:

Tags: Accident, Girl Child, Virudhachalam Constituency