Home /News /cuddalore /

சிதம்பரம் அருகே பெண் தூய்மைப் பணியாளர் அடித்துக்கொலை - மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை

சிதம்பரம் அருகே பெண் தூய்மைப் பணியாளர் அடித்துக்கொலை - மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை

மோப்ப நாயுடன் விசாரணை

மோப்ப நாயுடன் விசாரணை

Cuddalore : சிதம்பரம் அருகேயுள்ள கீழமணக்குடியில் சீதா தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த  பெண் தூய்மைப் பணியாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலைக் கைப்பற்றி புவனகிரி போலீசார் மோப்ப நாயான ‘ஸ்கூப்பரை’ வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரத்தை அடுத்த புவனகிரி அருகே உள்ளது கீழமணக்குடி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த சீதா (45) என்பவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ஏற்கெனவே இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூன்று பேருமே வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இத்னால், வீட்டில் சீதா மட்டுமே தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை சீதா நீண்ட நேரமாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு அருகே சென்று பார்த்தபோது, அங்கு சீதா தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதுபற்றி அந்த பகுதியினர் புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சீதாவின் சடலத்தை கைப்பற்றிய புவனகிரி போலீசார், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கடலூரிலிருந்து தடயவியல் துறை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து போலீஸ் மோப்ப நாய் ஸ்கூப்பர் வரவழைக்கப்பட்டது.  அது சம்பவ இடத்திலிருந்து வீட்டின் பின்புறம் உள்ள வயல் பக்கம் ஓடியது. அங்கு குழவி கல் ஒன்று கிடந்ததை போலீசார் கண்டறிந்து அதை கைப்பற்றினர். நள்ளிரவு அல்லது அதிகாலை நேரத்தில் சீதாவை மர்ம நபர் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Must Read : கொடுங்கையூர் லாக்கப் டெத் - காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட்

இந்த சம்பவம் குறித்து புவனகிரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இறந்துபோன சீதாவுக்கு எதிரிகள் யார்? கொலை செய்வதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Suresh V
First published:

Tags: Chidambaram, Crime News, Murder

அடுத்த செய்தி