ஹோம் /நியூஸ் /கடலூர் /

துணி காயவைக்கும் போது அறுந்துவிழுந்த மின்கம்பி.. மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உயிரிழப்பு

துணி காயவைக்கும் போது அறுந்துவிழுந்த மின்கம்பி.. மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உயிரிழப்பு

உயிரிழந்த தந்தை -மகன்

உயிரிழந்த தந்தை -மகன்

Cuddalore | கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே துணி காய போடும்போது மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ராமர். இவரது மனைவி பெரியம்மா வீட்டின் பின்புறம் துணி காய வைக்கும் போது மின்சார கம்பி அறுந்துள்ளது. அப்போது மனைவியை காப்பாற்ற சென்ற கணவர் ராமர் மின்சாரத்தில் சிக்கிக்கொண்டார்.தந்தையை காப்பாற்ற முயன்ற மகன் மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த நிலையில் அறுந்து விழுந்த மின்சார கம்பியால் தந்தை மகன் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த பெரியம்மா விருத்தாசலம் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  மழை காலம் என்பதால் மின்சார கம்பிகள் சரியான முறையில் உள்ளதா என மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதே போல் வேப்பூர் அடுத்த சித்தேரி கிராமத்தை சேர்நதவர் பெரியசாமி. இவர் காலை வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டு வாசலில் அறுந்து விழுந்துள்ள மின்சார கம்பியை கவனிக்காததால் கால் வைத்ததில் பெரியசாமி மின்சாரம் தாக்கி உயிரிந்தார்.

Also see...காரைக்குடி:சரக்கு வாகனத்தை வழிமறித்து ரூ.11 லட்சம் கொள்ளை

ஒரே நாளில் வேப்பூர் பகுதியில் 2 இடங்களில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Cuddalore