Home /News /cuddalore /

மனைவி என்று நினைத்து மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை.. மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயல்..

மனைவி என்று நினைத்து மகனை கொடூரமாக கொலை செய்த தந்தை.. மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் வெறிச்செயல்..

கடலூர்: மதுபோதையில் மகனை கொன்ற தந்தை

கடலூர்: மதுபோதையில் மகனை கொன்ற தந்தை

Cuddalore : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில், மனைவி என்று நினைத்து 14 வயது மகனை கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிபாளையம் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். இவர் செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். திருமணமான இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

மகன் அர்ஜுன் (வயது 14) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தான்.  குடிபழக்கத்திற்கு அடிமையான முருகன், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

முருகன்


இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு முருகன் மதுகுடிக்க பணம் கேட்டு மீண்டும் தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வீட்டைவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது. பிறகு நள்ளிரவு குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த முருகன் போதையில் மகன் என்று தெரியாமல், மனைவி என்று நினைத்துக் கொண்டு அங்கு தூங்கிக்கொண்டிருந்த மகன் அர்ஜுன் தலையில் குழுவிக் கல்லை தூக்கிபோட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கொலை செய்யப்பட்ட அர்ஜுன்.


இதனால் பலத்த காயம் அடைந்த அர்ஜுன், அதே இடத்தில் பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
இது பற்றிய தகவல்அறிந்த புதுப்பேட்டைபோலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவன் பிணத்தை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Must Read : பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் - முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

மேலும், மகனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர். பெற்ற மகனையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Crime News, Cuddalore, Murder

அடுத்த செய்தி