Home /News /cuddalore /

விளம்பர போஸ்டர்களில் என் படத்தை பயன்படுத்தாதீர்... திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வேண்டுகோள்

விளம்பர போஸ்டர்களில் என் படத்தை பயன்படுத்தாதீர்... திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வேண்டுகோள்

கோ.அய்யப்பன் எம்.எல்.ஏ.

கோ.அய்யப்பன் எம்.எல்.ஏ.

Cuddalore : விளம்பர போஸ்டர்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் பெயரை சிறிய அளவில் பயன்படுத்தினால் மட்டும் போதுமானது எனவும் கடலூர் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

விளம்பர போஸ்டர்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது பெயரை சிறிய அளவில் பயன்படுத்தினால் மட்டும் போதுமானது எனவும் கடலூர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கோ.அய்யப்பன் இவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கடலூர் மாநகராட்சி தேர்தலின் போது திமுக கட்சிக்கு எதிராக மாற்று வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றசாட்டப்பட்டு திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்காமல் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடலூர் சட்டமன்ற நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் பணிகளை துவக்கி வைத்து செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்களை சந்திக்க வேண்டும்,  அவர்களது குறைகளை கேட்டு தீர்க்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் ஓர் சட்டமன்ற உறுப்பினராகவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாலும் அய்யப்பன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தொடர்நது மக்கள் மனுகளை பெற்று வருகிறார். அத்துடன், எம்.எல்.ஏ. நிதியில் இருந்து புதிய சாலை பணிகள், ஏழை எளிய பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நிதிஉதவி அளித்தல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஐயப்பனின் ஆதரவாளர்கள் சுபநிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அவரது புகைப்படத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதால் கட்சி விதிகளுக்குட்பட்டு எந்தவித கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

மேலும் தனது புகைப்படத்தை எந்த நிகழ்வுக்கும் பயன்படுத்த  வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக,  ஆர்வமிகுதியால் பல்வேறு இடங்களில் சுப நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆன எனது புகைப்படம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் எனது புகைப்படத்தை பதிவிடுவது தவிர்தது சிறிய அளவில் பெயரை மட்டும் பதிவு செய்தால் நன்மை என குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எம்.எல்.ஏ.வின் கோரிக்கை


மேலும், ’ புகைப்படத்தை போடவேண்டிய கட்டாயம் இருந்தால் ஒப்பற்ற தலைவர் கலைஞர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள் புகைபடத்தை பதிவு செய்து பின்னர் எனது படத்தை போட வேண்டும்’ எனவும்  ஆதரவாளர்களுக்கும் திமுகவில் தொண்டர்களுக்கும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பனின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Must Read : தனி தமிழ்நாடு கேட்க வைத்துவிடாதீர்கள்.. மோடி, அமித் ஷாவுக்கு ஆ.ராசா கோரிக்கை

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எப்போது மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவார் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், கட்சி தலைமை அவரை, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கடலூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் திமுக தலைமைக்கு கோரிக்கை கடிதம் எழுதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published:

Tags: Cuddalore, DMK, MLA

அடுத்த செய்தி