Home /News /cuddalore /

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தால் கரையை நோக்கி தப்பித்து செல்லும் மான்கள்...

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் வெள்ளத்தால் கரையை நோக்கி தப்பித்து செல்லும் மான்கள்...

கொள்ளிடம் - தண்ணீரில் நீந்தி கரைக்கு செல்லும் மான்கள்

கொள்ளிடம் - தண்ணீரில் நீந்தி கரைக்கு செல்லும் மான்கள்

Cuddalore | கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றின் நடுவே வசித்து வரும் மான்கள் கரையை நோக்கி விவசாய விலை நிலங்களுக்கு இடையே புகுந்து செல்லுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அகலம் கொண்டதாகும். பறந்து விரிந்த இந்த ஆற்றின் நடுவே அதிக புதர்கள் திட்டுப் பகுதிகள் காணப்படுகின்றன. இந்தத் திட்டுபகுதிகளில் மான்கள் நரிகள் உள்ளிட்டவைகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பால் கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஐந்து தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாதல் படுகை, வெள்ளை மணல், முதலைமேடுதிட்டு உள்ளிட்ட ஆற்றுப்படுகை கிராமங்களில் வெள்ளம் உட் புகுந்துள்ளது.

இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் வீடுகளில் தண்ணீர் உட்புகுந்தும் அங்கு பயிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றிலும் முழுகி பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் ஆற்றின் நடுவே வசித்து வரும் மான்கள் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக கரையை நோக்கி விவசாய விளை நிலங்களுக்கு இடையே புகுந்து கரையின் மறுபுறம் தப்பி செல்லத் தொடங்கியுள்ளன.

Also see... ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு...

நாதல் படுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தால் பருத்தி பயிர்களை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அதன் நடுவே மான் ஒன்று தப்பி கரையின் மறு புறம் செல்லும் காட்சிகளை அப்பகுதி மக்கள் தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Deer, Sirkazhi

அடுத்த செய்தி