சிதம்பரம் நடராஜர் கோவிலில் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த பரதக் கலைஞர்களின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான நடனங்களை ஆடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தனர்.
சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் அகாடமி (பரதகலா அகாடமி) சார்பில் நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டில் இருந்து வந்திருந்த பெரும்பாலான நாட்டிய கலைஞர்கள் பல்வேறு வகையான நடனங்களை ஆடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தனர்.
அப்போது பல்வேறு அபிநயங்களுடன் நாட்டிய கலைஞர்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது இதையடுத்து நாட்டியம் ஆடிய கலைஞர்களை கௌரவித்து பரிசு வழங்கப்பட்டது.
இந்த நாட்டிய நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாட்டியப்பள்ளி நிர்வாகி பூரண புஷ்கலா, ”அமெரிக்காவிலிருந்து 65 மாணவர்களும் 16 குருக்களும் இங்கு வந்து நாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளனர். குச்சிப்புடி, கதக், ஒடிசி, உள்ளிட்ட பல்வேறு நடனங்களை நாட்டியமாக ஆடினர். அமெரிக்காவில் வசிக்கும் இந்த மாணவர்கள் ஒருங்கிணைந்து இங்கு வந்து நடராஜர் கோயிலில் நாட்டிய அரங்கேற்றத்தை நடத்தி இருக்கிறார்கள்.
Also see... மக்களே உஷார்... 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் வெளுக்கப்போகும் மழை! - எங்கெல்லாம் தெரியுமா?
சிதம்பரத்தில் துவங்கி உள்ள இந்த நாட்டிய நிகழ்ச்சி தஞ்சாவூர், மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களிலும் நடைபெற உள்ளது. சென்னையில் முடித்து விட்டு காசியிலும் நாட்டிய அரங்கேற்றம் செய்ய இருக்கிறோம். வயது வித்தியாசம் இல்லாமல் குரு, சிஷ்யன் என அனைவரும் இந்த நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று நடனம் ஆடி இருக்கிறார்கள்” என்றார்.
இங்கு பிறந்து வளர்ந்து நாங்கள் அமெரிக்காவில் வசிப்பதாகவும், அங்கு இந்த கலையை கற்றுக் கொண்டதாகவும், அதனால் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து இந்த நாட்டியத்தை நடராஜருக்கு சமர்ப்பித்ததாகவும் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தவர்கள் கூறினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Chidambaram, Cuddalore, Hindu Temple