ஹோம் /நியூஸ் /கடலூர் /

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீர் வலிப்பு... 80-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு நேர்ந்த சோகம் - கடலூரில் அதிர்ச்சி!

ஓடும் பேருந்தில் டிரைவருக்கு திடீர் வலிப்பு... 80-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு நேர்ந்த சோகம் - கடலூரில் அதிர்ச்சி!

விபத்தில் சிக்கிய பேருந்து

விபத்தில் சிக்கிய பேருந்து

Viruthachalam accident | விபத்துக்குள்ளான இடத்தை போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore | Virudhachalam

விருத்தாசலம் அருகே அரசு பேருந்து ஓட்டுனருக்கு வலிப்பு வந்ததால் அரசு பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சேப்பாக்கம் கிராமத்திலிருந்து விருத்தாசலம் நோக்கி வந்த அரசு பேருந்தை ஓட்டுனர் சரவணன் இயக்கி வந்தார். இவருக்கு திடீரென வலிப்பு நோய் வந்ததால் பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.

அப்போது அவ்வழியாக வந்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்து விபத்து நடத்த இடத்தை பார்வையிட்டு படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்திரவிட்டார். இதனை தொடர்நது விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 80 க்கு மேற்பபட்டோர் படுகாயம் அடைந்தவர்ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

First published:

Tags: Bus accident, Cuddalore, Local News, Virudhachalam Constituency