முகப்பு /செய்தி /கடலூர் / ஆணழகன் போட்டியில் கலந்துக்கொண்ட 21வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - கடலூரில் சோகம்

ஆணழகன் போட்டியில் கலந்துக்கொண்ட 21வயது இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழப்பு - கடலூரில் சோகம்

ஆணழகன் போட்டியில் உயிரிழந்த ஹரிஹரன்

ஆணழகன் போட்டியில் உயிரிழந்த ஹரிஹரன்

Cuddalore Body Builder Dead | போட்டியில் பங்கு பெறுவதற்கு முன்னதாக பிரட் சாப்பிட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.இதில் 75 கிலோ பிரிவில் மேடை ஏற தயாராக இருந்த சேலம் மாவட்டம் பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சார்ந்த ஹரிஹரன்(21) மேடை ஏறுவதற்கு முன்பாக வாம் அப் செய்து கொண்டிருந்த பொழுது திடீர் என மயக்கமடைந்துள்ளனர்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் கூறு ஆய்வுக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஹரிஹரன் போட்டியில் பங்கேற்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி மேற்கொண்டதால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை செய்து வருகின்றனர்.

போட்டியில் பங்கு பெறுவதற்கு முன்னதாக கடுமையாக பயிற்சி எடுத்துள்ளார். அதற்கு முன்னதாக பிரட் சாப்பிட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள தயாராக இருந்த இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Cuddalore, Local News