Home /News /cuddalore /

கபடி களத்திலேயே உயிரிழந்த விளையாட்டு வீரர்... அதிர்ச்சி வீடியோ

கபடி களத்திலேயே உயிரிழந்த விளையாட்டு வீரர்... அதிர்ச்சி வீடியோ

கபடி வீரர் மரணம்

கபடி வீரர் மரணம்

விமல் விளையாடும் பொழுது அதனை நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதில் அவர் கபடி போட்டியில் ஒருவரை பிடிக்க முயன்று பின்னர் கிழே மயங்கி விழும் காட்சி பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர், களத்திலேயே மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காடாம்புலீயூர் அடுத்த புரங்கணி கிராமத்தை சேர்நதவர் கபடி வீரர் விமல் (26). நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மணாடிகுப்பம் பகுதியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.இதில் புரங்கணி கிராமத்தை சேர்ந்த முரட்டுகாளை அணியை சேர்ந்த கபடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இதில் விமல் அணியினர் கபடி போட்டிக்கு களம் இறங்கி விளையாடியுள்ளனர். கபடி விரர் விமல் விளையாடும் பொழுது அதனை நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதில் அவர் கபடி போட்டியில் ஒருவரை பிடிக்க முயன்று பின்னர் கிழே மயங்கி விழும் காட்சி பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி விடுதியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை.. திருவள்ளூரில் சோகம்

இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் விமலை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். எனினும், விமல்  ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார் .  தொடர்நது விமலின் உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லுரியில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


இந்த சம்பவம் குறித்து முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்த வருகின்றனர்.  கபடி போட்டியின்போதே கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Cuddalore, Kabaddi

அடுத்த செய்தி