முகப்பு /செய்தி /கடலூர் / வேப்பூரில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து : ஆத்திரத்தில் சிறைபிடித்து போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்

வேப்பூரில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து : ஆத்திரத்தில் சிறைபிடித்து போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்

அரசு பேருந்தை சிறை பிடித்த மாணவர்கள்

அரசு பேருந்தை சிறை பிடித்த மாணவர்கள்

Cuddalore School Student Protest | பள்ளிக்கு முன் அரசு பேருந்து நிற்காமல சென்றதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்தை சிறை பிடித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Cuddalore, India

கடலூரில் பள்ளிக்கு முன் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்தை மாணவர்கள் சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அரசங்குடி கிராமத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நாள்தோறும் கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார் பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் அரசு பேருந்து மட்டுமே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டது. அரசு பேருந்தில் பயணிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தை நாள்தோறும் அரசு பள்ளி முன்பு நிறுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இதற்கு பேருந்து ஓட்டுனர் அதிகாரிகள் உத்தரவு இல்லாமல் நிறுத்த முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது அரசு பேருந்து ஓட்டுநர் பள்ளி முன்பு நிறுத்தாமல் செல்வதால் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாக மாணவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து நிற்காமல் அரசு பேருந்துகள் செல்வதால் ஆத்திரமடைந்த அரசங்குடி கிராமத்தில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பேருந்து வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சிறுபாக்கம் காவல்துறையினர் வருகை தந்து மாணவரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் கொடுத்து அடிப்படையில் மாணவ மாணவிகள் கலைந்து பள்ளிக்குச் சென்றனர்.

First published:

Tags: Cuddalore, Local News