கடலூரில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற லாரி ஒன்று கூகுள் மேப் காட்டிய தவறான வழியால் சுரங்கப் பாதையில் மோதும் அபாயத்திற்கு தள்ளப்பட்டது.
கடலூர் சிப்காட் பகுதியில் இருந்து ரசாயனங்களை ஏற்றிய கனரக லாரி ஒன்று பெங்களூரு நோக்கிப் புறப்பட்டது. லாரியை சங்ககிரியை சேர்ந்த முருகன் எனும் நபர் ஓட்டிச் சென்றார். கடலூரில் இருந்து பெங்களூருவுக்கு வழி தெரியாத காரணத்தினால் செல்போனில் கூகுள் மேப்பை நாடிய அவர், அதில் பெங்களூரு செல்வதற்கான வழியைத் தேர்வு செய்தார்.
ஆனால் அடுத்து நடந்ததுதான் சோகம். பெரும்பாலும் சரியாகவே வழிகாட்டும் கூகுள் மேப், முருகனின் லாரியை மட்டும் சோதித்துப் பார்த்தது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரை லாரி வந்தடைந்த நிலையில் கனரக வாகனங்கள் செல்லும் சாலையைக் காட்டுவதற்குப் பதிலாக இலகு ரக வாகனங்கள் செல்லும் சாலையை ஓட்டுநருக்குக் காட்டியது கூகுள்.
அதை நம்பி தவறான பாதையில் சென்ற லாரி ரயில்வே சுரங்கப்பாதையில் மோதவிருந்தது. அப்போது அங்கே வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ஓட்டுநரைத் தடுத்து சரியான வழியைக் கூறியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. முழுவதுமாக கூகுளை நம்பினால் அதோ கதிதான் போலும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cuddalore, Google map