ஹோம் /நியூஸ் /கடலூர் /

கல்யாணத்துக்கு முன் காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்.. பூச்சி மருந்து குடித்து தாய், தந்தை தற்கொலை - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

கல்யாணத்துக்கு முன் காதலனுடன் ஓட்டம் பிடித்த மகள்.. பூச்சி மருந்து குடித்து தாய், தந்தை தற்கொலை - கடலூரில் அதிர்ச்சி சம்பவம்

தற்கொலை செய்துகொண்ட தம்பதி

தற்கொலை செய்துகொண்ட தம்பதி

Chidambaram News : கல்லூரிக்கு சென்ற புஷ்பரோகினி தான் ஏற்கனவே காதலித்து வந்த வேலங்கிப்பட்டு சேர்ந்த பால்ராஜ்(24) என்பவருடன் சென்று விட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chidambaram Nm, India

  சிதம்பரம் அருகே திருமணம் நிச்சயம் செய்ய இருந்த மகள் காதலனுடன் சென்றதால் தாய், தந்தை இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(65), இவர் தனது மனைவி சுமதியுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் இறந்து கிடந்த இருவரது உடலையும் கைப்பற்றிய புதுச்சத்திரம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்களது மகள் புஷ்பரோகினி(19) சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். இவருக்கு வரும் 20.11.22ம் தேதி பெரியாண்டிக்குழி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்(25) என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.

  இதையும் படிங்க : வாரிசு படத்துக்கு சிக்கல்... தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் - சீமான் எச்சரிக்கை

  இந்நிலையில், நேற்று (17.11.22ம் தேதி) காலை கல்லூரிக்கு சென்ற புஷ்பரோகினி தான் ஏற்கனவே காதலித்து வந்த வேலங்கிப்பட்டு சேர்ந்த பால்ராஜ்(24)என்பவருடன் சென்று விட்டார். இதனால் அவரின் தாய், தந்தை இருவரும் இன்று காலை வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் வயலில் நெல்லுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த  பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து இறந்தது தெரியவந்தது.

  மேலும் அவரது மகன் சந்திரசேகரன் என்பவர் அம்மா, அப்பாவை காணவில்லை என்று தேடிச் சென்றபோது இருவரும் இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து சடலத்தை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளதும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

  சீர்காழி செய்தியாளர் - பிரசன்ன வெங்கடேசன்

  தற்கொலை தீர்வல்ல: மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Karthi K
  First published:

  Tags: Chidambaram, Crime News