ஹோம் /நியூஸ் /கடலூர் /

மாட்டு பொங்கல்: கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்!

மாட்டு பொங்கல்: கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த மக்கள்!

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

Cuddalore Fish sale | மாட்டு பொங்கலான இன்று பெரும்பாலான வீடுகளில் அசைவம் எடுத்து சாப்பிடுவது வழக்கம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore | Cuddalore

கடலூரில் மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர் துறைமுகத்தில் ஏராளமான அசைவ பிரியர்கள் மீன் வாங்க குவிந்தனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதில் வீடுகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இன்று உழவர் திருநாளான மாட்டுப்பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இன்று பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, சொத்திகுப்பம், ராசாபேட்டை, சித்திரப்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி செல்வது வழக்கம்.

இதற்காக மீன்கள் வாங்குவதற்காக கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே பொதுமக்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு மீன்களை வாங்கி சென்றனர்.

First published:

Tags: Cuddalore, Fish, Pongal 2023