ஹோம் /நியூஸ் /Cuddalore /

கடலூரில் பட்டாசு குடோனில் தீ விபத்து- பெண்கள் உள்பட மூவர் பலி

கடலூரில் பட்டாசு குடோனில் தீ விபத்து- பெண்கள் உள்பட மூவர் பலி

கடலூர் பட்டாசு ஆலை விபத்து

கடலூர் பட்டாசு ஆலை விபத்து

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக 3 லட்ச ரூபாயை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கடலூரில் நாட்டு வெடி பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே உள்ள எம் புதூர் கிராமத்தில் மோகன் ராஜ் என்பவர் நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் கொட்டகை வைத்துள்ளார். கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப துக்க நிகழ்ச்சிகளில் வெடிக்க பயன்படுத்தும் நாட்டு வெடி பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் என ஐந்து பேர் இன்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடி பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்த ஐந்து பேர்களும் சிக்கியுள்ளனர். வெடித்து சிதறிய வெடி விபத்தில் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த அம்பிகா(50) மற்றும் பெரிய காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா(35) என்ற இரண்டு பெண்களும் சிஎன் பாளையத்தை சேர்ந்த சத்யராஜ் (34) தன்ற ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த நிலையில் வசந்தா என்ற பெண்ணும் வைத்திலிங்கம் ஆணும் படுகாயங்களுடன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் உடல் முழுவதும் வெடி காயங்கள் ஏற்பட்டு வசந்தா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெடிவிபத்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இதனிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் நாட்டு வெடி தயாரிப்பு உரிமையாளர் மோகன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திமுக எம்.பி திருச்சி சிவா மகன் சூர்யா கைது

குடிசைத் தொழிலாக நடைபெற்றுவந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட இந்த வெடி விபத்தில் மூன்று பேர் உடல் சிதறி பலியான சம்பவம் சுற்றுவட்டார கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்ச ரூபாயை நிவாரண நிதியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Published by:Karthick S
First published:

Tags: Cuddalore, Fire accident, MK Stalin