ஹோம் /நியூஸ் /Cuddalore /

கடல் கடந்த காதல்... லண்டன் பெண்ணை மணந்த கடலூர் என்ஜீனியர்

கடல் கடந்த காதல்... லண்டன் பெண்ணை மணந்த கடலூர் என்ஜீனியர்

கடலூர் திருமணம்

கடலூர் திருமணம்

Cuddalore : கடல் கடந்து காதல் மலர்ந்து தற்போது தமிழ் பாரம்பரியம் பிடித்த காரணத்தினால் பல ஆண்டுகளாக பெற்றோர்களிடம் ஒப்புதல் பெற்று திருமணம் நடைபெற்றுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர், இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களதுமகன் ரஞ்சித் பொறியியல் படிப்பு முடித்து கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், லண்டன் நாட்டை சேர்ந்த அன்னாலுய்சா இவர் அந்த நாட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ரஞ்சித் மற்றும் அன்னாலுய்சா சுவிட்சர்லாந்தில் உள்ள தனியார் கம்பெனியில் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேரும் கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போது அன்னாலுய்சா இங்கிலாந்து நாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் கடலூர் அடுத்த திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் முறையில் ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சா வுக்கும் திருமணம் நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி ரஞ்சித், அன்னாலுய்சா-க்கு திருமாங்கல்யம் கட்டி வேத மந்திரங்கள் முழங்க பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. பின்னர் மணமகன் ரஞ்சித் கூறுகையில், நான் பொறியாளர் பட்டபடிப்பு முடித்து கடந்த பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். அப்போது ஒரே நிறுவனத்தில் நானும், அன்னாலுய்சா வும் பணி புரிந்து வந்தோம் அப்போது இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.

பின்னர் நாளடைவில் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதம் பெற்றவுடன் தமிழ் முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்  என தீர்மானித்து அதன்படி இருவீட்டு பெற்றோர்களிடம் தொடர்ந்து பேசி வந்தோம். இருவீட்டார் சம்மதம் பெற்று தான் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டில் இருவீட்டு பெற்றோர்களிடம் உரிய அனுமதி பெற்று இன்று திருமணம் நடைபெற்று உள்ளது.

Also Read:கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் நகைக் கடன் பெற்றவர்களுக்கு 100% தள்ளுபடி - அமைச்சர் ஐ.பெரியசாமி

அன்னாலுய்சா கூறுகையில், நானும் எனது கணவர் ரஞ்சித்தும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். மேலும் எனக்கு இந்திய கலாச்சாரம் என்னை வெகுவாக கவர்ந்து மிகவும் பிடித்தது. மேலும் தமிழ் பாரம்பரிய முறைப்படி பட்டு வேஷ்டி, பட்டு சேலை மங்கல வாத்தியம் போன்றவற்றை மூலம் திருமணம் நடைபெற்றது.ரஞ்சித்தை அதிக அளவில் காதலித்து வந்தேன். அவரை திருமணம் செய்து தமிழ் பாரம்பரியத்தை முழுவதுமாக கற்றுக்கொண்டு புரிதல் ஏற்படுத்தி வாழவேண்டும் என்ற எண்ணத்தில்  ரஞ்சித்தை திருமணம் செய்து கொண்டு உள்ளேன்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனைத் தொடர்ந்து மடல் மூலமாக காதல்,செல்போன் மூலமாக காதல் இருந்து வந்த நிலையில் கடல் கடந்து காதல் மலர்ந்து தற்போது தமிழ் பாரம்பரியம் பிடித்த காரணத்தினால் பல ஆண்டுகளாக பெற்றோர்களிடம் ஒப்புதல் பெற்று திருமணம் நடைபெற்றுள்ளது அனைவரையும் சந்தோஷத்தில் மூலம் ஆழ்த்தியுள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: Cuddalore, Love, Love marriage, Tamil News, Tamilnadu