Home /News /cuddalore /

இருசக்கர வாகனம், அடி பம்பு வரிசையில் நுழைவு வாயில் கேட்டுக்கும் சேர்த்து கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர்.. தொடரும் அவலம்..

இருசக்கர வாகனம், அடி பம்பு வரிசையில் நுழைவு வாயில் கேட்டுக்கும் சேர்த்து கான்கிரீட் போட்ட ஒப்பந்ததாரர்.. தொடரும் அவலம்..

நுழைவு வாயில் கேட்டுக்கும் சேர்த்து கான்கிரீட்

நுழைவு வாயில் கேட்டுக்கும் சேர்த்து கான்கிரீட்

Cuddalore : சாலையில் நின்றிருந்த பைக்கோடு சேர்த்து கான்கிரீட் , அடி பம்பு மீது கான்கிரீட் , சாக்கடை தண்ணீருடன் கான்கிரீட் போடப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது கடலூரில் நுழைவு வாயில் கேட்டுக்கும் சேர்த்து கான்கிரீட் போடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Cuddalore | Vellore
கடலுார் பழைய ஆட்சியர் அலுவலக வாயில் வளாக கேட்டுடன் சேர்த்து சிமெண்ட் கான்கிரீட் தளம் போட்டுள்ளனர்.

வேலூரில் அடி பம்பு மீது கான்கிரீட் போடப்பட்ட விவகாரம் , இருசக்கர வாகனத்தை அகற்றாமல் கான்கிரீட் போடப்பட்டது ,கரூர் மாநகராட்சியில் அவசர கதியில் சாக்கடை தண்ணீருடன் கான்கிரீட் போடப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்தன. அதே போன்று கடலூர் பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2015ம் ஆண்டு கடலூரில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளும் பல நாட்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இதனை கருத்தில் கொண்டு 2016 ஆம் ஆண்டு 46 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் நகரப் பகுதிகளில் மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது. மிகவும் மந்தமாக நடைபெற்று வரும் இந்த பணியில் பல்வேறு குறைபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பல இடங்களில் தண்ணீரே செல்ல முடியாத அளவிற்கு கூட இந்த கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் கடலுார் பழைய ஆட்சியர் அலுவலகத்தையொட்டி, சப் ஜெயில் சாலையில் மழை நீர் வடிகால் கட்டப்பட்டது. அப்போது அலுவலக பின்புற நுழைவு வாயிலை விட உயரமாக இந்த கால்வாய் அமைக்கப்பட்டது.



இதனால், வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலையில், நுழைவு வாயிலை கான்கிரீட் தளம் அமைத்து உயர்த்தினர். அப்போது அங்கு இருந்த இரும்பு கேட்டையும் சேர்த்து வைத்து, கான்கிரீட் தளம் அமைத்துள்ளனர். இதனால், கேட்டை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



இந்த பழைய ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது மாவட்ட கருவூலம், வனத்துறை அலுவலகம், அருங்காட்சியகம், மீன்வளத்துறை அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு பின்புறமாக செல்லும் வழியில் உள்ள வாயில் கேட்டுடன் சேர்த்து, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டதால், கேட் மூட முடியாத நிலையில் உள்ளது. பணியாளர்கள் மட்டுமன்றி, பல வாகனங்கள், அலுவலக பின்புற வாயில் வழியாக உள்ளே வருகின்றன. மேலும், அவ்வழி யாக ஆட்சியர் மற்றும் டி.ஆர்.ஓ., - ஆர்.டி.ஓ., முகாம் அலுவலகங்க ளுக்கு செல்லவும் வழி உள்ளது. பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் அந்த வழி மூடப்படும். தற்போது கேட்டை மூட முடியாத நிலையில், 24 மணி நேரமும் வாயில் திறந்தே கிடக்கிறது.



இதனால், யார்  வேண்டுமாணாலும் பழைய ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வாசல் இரும்பு கேட்டையும் சேர்த்து சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்ததால் அலுவலக பிரதான வாயில் மூடப்படாமல் உள்ளது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் பாதுகாப்புயின்றி திறந்தே உள்ளது இதனால் இந்த அலுவலகத்தில் சமூக விரோத செயல் நடைபெற வாய்ப்புள்ளதால் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Cuddalore, Vellore

அடுத்த செய்தி