ஹோம் /நியூஸ் /கடலூர் /

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மாதாந்திர ஊதிய தொகை... ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மாதாந்திர ஊதிய தொகை... ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம்

நெய்வேலி என்.எல்.சி நிறுவனம்

நிலை எடுப்பால் பாதிக்கப்படும் மக்கள் சிறந்த முறையில் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தல்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Cuddalore | Neyveli | Cuddalore

  என்.எல்.சி. நிறுவனத்திற்காக நிலம் வழங்கியவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை  மற்றும மாதாந்திர ஊதிய தொகை வழங்கப்படும் என என்.எல்.சி நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

  கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரக்கூடிய என்.எல்.சி நிறுவனம் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலம் மற்றும் கிராம மக்களிடம் இருந்து நிலங்களைப் பெற்றுக் கொண்டு என்.எல்.சி இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது.

  இந்த நிலையில் நிலங்களை கைப்பற்றிய போது போதிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை என்ற தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் தமிழக அரசும் என்.எல்.சி நிர்வாகத்துடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

  இந்த நிலையில் தற்போது மூன்றாவது சுரங்க விரிவாக்க பணிக்காக சுமார் 40 கிராமங்கள் இடையே மீண்டும் நிலத்தை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்த திட்டமிட்டது.

  இதற்கு ஒரு பிடி மண் கூட தரமாட்டோம் என விவசாயிகள் தரப்பிலும் கிராம மக்கள் திறப்பிலும் கூறிய பின்னரும் மாவட்ட நிர்வாக சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் பாதிக்கப்பட்ட கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

  அப்போது கூட்டத்தில் பேசிய கிராம மக்கள் என்.எல்.சி நிர்வாகத்திற்கு ஒரு பிடி மண் கூட தரமாட்டோம் எனத் உறுதியளித்தனர். இதன் பின்னர் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் என்.எல்.சி நிர்வாகம் முன்னுரிமை அளிக்கவில்லை என தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

  இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிற்கும் பிரதமருக்கும் கடிதம் ஒன்றை எழுதினார் அதில் என்எல்சி நிர்வாகத்தில் தமிழர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும், மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்க வேண்டும், நிலம் கொடுத்தோர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் தமிழக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக சார்பில் தொடர்ச்சியாக என்எல்சி நிர்வாகத்துடன் நிலம் கொடுத்து அவர்களிடம் முத்தரப்பு கூட்டம் என்பது நடைபெற்றது.

  இதையும் படிங்க | போலீசாரை தகாத வார்த்தையால் பேசிய வழக்கு... வேலூர் நீதிமன்றத்தில் முருகன் ஆஜர்

  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து என்எல்சி இந்தியா நிறுவனம் நில எடுப்பால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் வேலைவாய்ப்பு பெற பயிற்சிகள் அளிக்கவும், உயர் இழப்பீடு கொடுக்கவும் முன்வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

  மேலும், வேலையில் சேர விரும்பாதவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை ரூபாய் 7000 முதல் ரூ 10 ஆயிரம் வரை மூன்று பிரிவுகளில் 20 வருடங்களுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

  இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ரூபாய் 500 உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாதாந்திர உதவித் தொகையை பெற விரும்பாதவர்களுக்கு வேலைக்கு பதிலாக ஒருமுறை வழங்கப்படும் வாழ்வாதார தொகை ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை மூன்று பிரிவுகளில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வேலைவாய்ப்பு மற்றும் இதர பலன்களை தன் விருப்பத்திற்கு ஏற்ப பெற விருப்பமுள்ளவர்கள் உரிய விண்ணப்ப படிவங்களை மாவட்ட வருவாய் அலுவலர் என்எல்சி நில எடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் எனவும், நிலத்திற்கான உரிய பண பலன்களை பெற்று நிலத்தை ஒப்படைத்த பின் வேலைவாய்ப்பானது முதுநிலை வரிசையில் கணக்கிடப்பட்டு வெளிப்படை தன்மையுடன் வழங்கப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

  நிலை எடுப்பால் பாதிக்கப்படும் மக்கள் சிறந்த முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை விரைவில் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

  செய்தியாளர்: பிரேமானந்த், நெய்வேலி

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Cuddalore, Neyveli, NLC